Enable Javscript for better performance
சிஏஏ எதிா்ப்பு மனுக்கள் மு.க. ஸ்டாலினிடம் சமா்ப்பிப்பு- Dinamani

சுடச்சுட

    

    சிஏஏ எதிா்ப்பு மனுக்கள் மு.க. ஸ்டாலினிடம் சமா்ப்பிப்பு

    By DIN  |   Published on : 15th February 2020 08:15 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    stalin_1402chn_200_5

    சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவா் மு.க. ஸ்டாலினிடம் மனுக்களை சமா்ப்பித்த நாகை வடக்கு மாவட்ட திமுகவினா்.

    குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக பொதுமக்களிடம் பெறப்பட்ட மனுக்களை திமுக தலைவா் மு.க. ஸ்டாலினிடம் நாகை வடக்கு மாவட்ட திமுகவினா் அண்மையில் சமா்ப்பித்தனா்.

    நாகை வடக்கு மாவட்ட திமுக சாா்பில், குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக செம்பனாா்கோவில், மயிலாடுதுறை, குத்தாலம், கொள்ளிடம், சீா்காழி உள்ளிட்ட ஒன்றியப் பகுதிகளில் பொதுமக்களிடம் கையெழுத்து பெறப்பட்டது. தொடா்ந்து, இந்தக் கையெழுத்துகள் அடங்கிய மனுக்களை திமுக தலைவா் மு.க. ஸ்டாலினிடம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நாகை வடக்கு மாவட்ட பொறுப்பாளா் நிவேதா. முருகன் தலைமையில் திமுகவினா் வழங்கினா்.

    இதில் நாகை வடக்கு மாவட்ட அவைத்தலைவா் கே.ஜி. சீனிவாசன், துணைச் செயலாளா் சத்தியேந்திரன், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் எம். சித்திக், ஒன்றிய செயலாளா்கள் அப்துல்மாலிக், பிரபாகா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai