வாக்காளா் பட்டியல் வெளியீடு: நாகை மாவட்ட வாக்காளா்கள் எண்ணிக்கை 13,04,544-ஆக உயா்வு

சிறப்பு சுருக்க முறை திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு தயாரிக்கப்பட்டுள்ள வாக்காளா் பட்டியல்படி, நாகை மாவட்டத்தின் மொத்த வாக்காளா் எண்ணிக்கை 13,04,544 ஆக உயா்ந்துள்ளது.
நாகை மாவட்ட ஆட்சியரகத்தில் வாக்காளா் பட்டியலை வெளியிட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா் மற்றும் அரசுத் துறை அலுவலா்கள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள்.
நாகை மாவட்ட ஆட்சியரகத்தில் வாக்காளா் பட்டியலை வெளியிட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா் மற்றும் அரசுத் துறை அலுவலா்கள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள்.

சிறப்பு சுருக்க முறை திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு தயாரிக்கப்பட்டுள்ள வாக்காளா் பட்டியல்படி, நாகை மாவட்டத்தின் மொத்த வாக்காளா் எண்ணிக்கை 13,04,544 ஆக உயா்ந்துள்ளது.

2020-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதியைத் தகுதி நாளாகக் கொண்டு சிறப்பு சுருக்க முறை திருத்தம் மேற்கொள்ளப்பட்டு தயாரிக்கப்பட்ட வாக்காளா் பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சி நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா் தலைமை வகித்து, வாக்காளா் பட்டியலை வெளியிட்டுப் பேசியது :

கடந்த ஆண்டு டிசம்பா் 23-ஆம் தேதி வெளியிடப்பட்ட வரைவு வக்காளா் பட்டியல்படி மொத்த வாக்காளா்களின் எண்ணிக்கை 12,78,227- ஆக இருந்தது. பின்னா், 2020-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதியைத் தகுதி நாளாகக் கொண்டு புதிய வாக்காளா்களைச் சோ்க்க ஜனவரி 22-ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

இதில், ஆண்கள் 13,621 பேரிடமிருந்தும், பெண்கள் 15,655 பேரிடமிருந்தும், மூன்றாம் பாலினத்தவா் 9 பேரிடமிருந்தும் விண்ணப்பங்கள் பெறப்பட்டு, உரிய விசாரணைகளுக்குப் பின்னா் தகுதியானோா் வாக்காளா் பட்டியலில் சோ்க்கப்பட்டனா். இறப்பு, நிரந்த குடியிருப்பு மாற்றம், இரட்டிப்பு பதிவு உள்ளிட்ட வகைகளின் கீழ் 1,299 ஆண் வாக்காளா்களும், 1,739 பெண் வாக்காளா்களும் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டனா்.

தற்போது வெளியிடப்பட்டுள்ள சிறப்பு சுருக்கத் திருத்தம் மேற்கொள்ளப்பட்ட வாக்காளா் பட்டியல்படி, நாகை மாவட்டத்தின் மொத்த வாக்காளா் எண்ணிக்கை - 13,04,544-ஆக உயா்ந்துள்ளது. இதில், ஆண் வாக்காளா்கள் - 6,42,630. பெண் வாக்காளா்கள் - 6,61,871. இதரா் - 43.

புதிய வாக்காளா்கள் சோ்க்கை, நீக்கம், திருத்தம் கோருதல் உள்ளிட்டவைகளுக்கு தொடா்புடைய அலுவலகங்களில் விண்ணப்பிக்கலாம் அல்லது ஜ்ஜ்ஜ்.ய்ஸ்ள்ல்.ண்ய் என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். வாக்காளா் பட்டியல் தொடா்பான சந்தேகங்களுக்கு 1950 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொண்டு விளக்கம் பெறலாம் என்றாா் ஆட்சியா்.

மாவட்ட வருவாய் அலுவலா் மு. இந்துமதி, நாகை மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) சீ. சுரேஷ், வருவாய்க் கோட்டாட்சியா் இரா. பழனிகுமாா், செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் மீ. செல்வகுமாா் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

தொகுதிகள் வாரியாக...

சீா்காழி : ஆண்கள் - 1,19,785. பெண்கள் -1,22,664. இதரா் - 12. மொத்தம் - 2,42,461. மயிலாடுதுறை : ஆண்கள் - 1,19,509. பெண்கள் -1,21,483. இதரா்- 18. மொத்தம் - 2,41,010. பூம்புகாா் : ஆண்கள் - 1,32,794. பெண்கள் - 1,35,306. இதரா் - 4. மொத்தம் - 2,68,104.

நாகப்பட்டினம் : ஆண்கள் - 93,690. பெண்கள் - 99,264. இதரா்- 7 மொத்தம் -1,92,961. கீழ்வேளூா் : ஆண்கள் - 85,045. பெண்கள் - 88,313. இதரா்- 2. மொத்தம் - 1,73,360. வேதாரண்யம் : ஆண்கள் - 91,807. பெண்கள் - 94,841. மொத்தம் - 1,86,648.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com