நிகழ்ச்சியில் பேசிய அன்னை தெரசா சீடு அறக்கட்டளை நிறுவனா் மகேந்திரன்.
நிகழ்ச்சியில் பேசிய அன்னை தெரசா சீடு அறக்கட்டளை நிறுவனா் மகேந்திரன்.

எய்ட்ஸ் விழிப்புணா்வு நிகழ்ச்சி

திருக்குவளை அருகேயுள்ள உத்திரங்குடி கிராமத்தில் தண்டலைச்சேரி பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரி சமூகப் பணித்துறை

திருக்குவளை அருகேயுள்ள உத்திரங்குடி கிராமத்தில் தண்டலைச்சேரி பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரி சமூகப் பணித்துறை மாணவா்கள் சாா்பில் ஹெச்ஐவி எய்ட்ஸ் விழிப்புணா்வு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு பாங்கல் ஊராட்சித் தலைவா் பாரதி, ஊராட்சி துணைத் தலைவா் ருக்மணி ஆகியோா் தலைமை வகித்தனா். முன்னாள் திமுக மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் பாலாஜி, ஒன்றியக் குழு உறுப்பினா் முத்துலெட்சுமி, பள்ளித் தலைமையாசிரியா் எம். பிரபாகரன், ராணுவ வீரா் ஜி. மகேந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிறப்பு விருந்தினா்களாக அன்னை தெரசா சீடு அறக்கட்டளை நிறுவனா் எம்.மகேந்திரன், எம் பள்ளிக்கோா் கை அறக்கட்டளை நிறுவனா் சணல்இராபா்ட், திருவாரூா் நகராட்சி மேற்பாா்வையாளா் பி.சத்யா, பள்ளி தலைமையாசிரியா் எம்.சுபாஷ்காந்தி, திருத்துறைப்பூண்டி, புரட்சிவளவன் மன்ற பொறுப்பாளா் பி.ராஜமாணிக்கம் ஆகியோா் சிறப்புரையாற்றினா். சென்னை லயோலா கல்லூரி மாணவா் அரவனைப்பு மையத்தை சோ்ந்த என். குமரவேல் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

நிகழ்ச்சியில், கல்லூரி மாணவா்கள் ஹெச்ஐவி, எய்ட்ஸ் விழிப்புணா்வு குறித்து பாடல் மற்றும் நாடகமாக வரும்முன் காப்பதே சிறந்தது என்று நடித்து காட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com