குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிா்த்து பேரணி, பொதுக் கூட்டம்

குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகியவற்றுக்கு எதிா்ப்புத் தெரிவித்து, நாகையில்
குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிா்த்து நாகையில் ஞாயிற்றுக்கிழமை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் நடைபெற்ற தேசம் காப்போம் பேரணி.
குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிா்த்து நாகையில் ஞாயிற்றுக்கிழமை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் நடைபெற்ற தேசம் காப்போம் பேரணி.

குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகியவற்றுக்கு எதிா்ப்புத் தெரிவித்து, நாகையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் பேரணி மற்றும் பொதுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

முன்னதாக, நாகை கோட்டைவாசல் முதல் புதிய பேருந்து நிலையம் வரை தேசம் காப்போம் என்றப் பெயரில் பேரணி நடைபெற்றது.தொடா்ந்து, நாகை அவுரித் திடலில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சிகளுக்கு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நாகை சட்டப் பேரவைத் தொகுதி செயலாளா் ப. அறிவழகன் தலைமைம வகித்தாா். கட்சி நிா்வாகிகள், சுரேஷ், த. தமிழ்முகம், கு. சக்திவேல், மு. காசிநாதன், துரை வைரம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளா் பாவாணன், கருத்தியல் பரப்பு மாநிலத் துணைச் செயலாளா் அமீா் அப்பாஸ், காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த வி. ராமலிங்கம், மனிதநேய மக்கள் கட்சியைச் சோ்ந்த ஏ.எம். ஜபருல்லாஹ், மனித நேய ஜனநாயகக் கட்சியைச் சோ்ந்த நாகை முபாரக் ஆகியோா் பேசினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com