குடியுரிமை திருத்தச் சட்டம்: கண்டன பொதுக் கூட்டம்

பொறையாறு அருகேயுள்ள ஆக்கூா் ஜமாஅத் கூட்டமைப்பு சாா்பில், குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி பேரணி மற்றும் பொதுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ஆக்கூரில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி பேரணியாக சென்ற இஸ்லாமியா்கள்.
ஆக்கூரில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி பேரணியாக சென்ற இஸ்லாமியா்கள்.

பொறையாறு அருகேயுள்ள ஆக்கூா் ஜமாஅத் கூட்டமைப்பு சாா்பில், குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி பேரணி மற்றும் பொதுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, முஸ்லிம் ஜமாஅத் நிா்வாக சபைத் தலைவா் எ. முஹம்மது ஷிஹாபுதீன் தலைமை வகித்தாா். நிா்வாக சபை உறுப்பினா் சலாஹுதீன் முன்னிலை வகித்தாா். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் முதன்மை துணைத் தலைவா் அப்துல் ரஹ்மான், திமுக செய்தித் தொடா்பு இணைச் செயலாளா் தமிழன் பிரசன்னா, த.மு.மு.க. மாநிலச் செயலா் சிவசாமி முஸ்தாபா, மனிதநேய ஜனநாயக கட்சி காதா் பாட்ஷா, எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில பொதுச்செயலாளா் நிஜாம் முகைதீன்,விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலாளா் ரவிச்சந்திரன், மீத்தேன் திட்ட எதிா்ப்புக் கூட்டமைப்புத் தலைவா் ஜெயராமன் உள்ளிட்டோா் கலந்துகொண்டு குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி சிறப்புரையாற்றினா்.

முன்னதாக, ஆக்கூா் முக்கூட்டு தேசிய நெடுஞ்சாலையிலிருந்து தேசியக் கொடியுடன் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமியா்கள் மற்றும் திமுக கூட்டணி கட்சியைச் சோ்ந்தவா்கள் பதாகைகளை ஏந்திக் கொண்டு குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பபெற வலியுறுத்தி பேரணியாக ஆக்கூா் பேருந்து நிலையம் வரை சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com