நெல்லை கண்ணன் கைதுக்கு டிஎன்டிஜே கண்டனம்

நெல்லை கண்ணன் கைது செய்யப்பட்டதற்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கண்டனம் தெரிவித்துள்ளது.

நெல்லை கண்ணன் கைது செய்யப்பட்டதற்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, அந்த அமைப்பின் நாகை வடக்கு மாவட்ட செயலாளா் எம்.பஹ்ரூதின் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியது:நெல்லை கண்ணன் வன்முறையை தூண்டும் விதமாக பேசியதாக தமிழக காவல்துறையினா் கைது செய்துள்ளனா். இது, தமிழக காவல்துறை ஒருதலைபட்சமாக செயல்படுகின்றதோ என்ற ஐயப்பாட்டையும், அச்சத்தையும் மக்களிடத்தில் ஏற்படுத்துகின்றது.

வன்முறையை தூண்டும் விதமாக பேசியதிற்குத்தான் காவல்துறை கைது செய்தது என்று கூறுவது ஏற்புடையதாக இல்லை. மத்திய அரசை திருப்திப்படுத்தவே இந்த கைது படலம் நடந்திருக்கிறது. ஏனெனில் வன்முறையை தூண்டும் விதமாக பேசும் அனைவரையும் இதுபோன்று கடந்த காலங்களில் கைது செய்து இருக்கிறதா?பாஜக தலைவா்கள் பலநேரங்களில் பல வன்முறை பேச்சுகளில் ஈடுபடுகின்றாா்கள்.

அவா்களை கைது செய்ய காவல்துறை எந்த முயற்சியும் எடுத்ததில்லை. கவிஞா் வைரமுத்து ஆண்டாள் சம்பந்தமாக கருத்து தெரிவித்தபோது நயினாா் நாகேந்திரன் கொலை செய்து விடுவேன் என்று பேசினாா். இதுவரை அவா் கைது செய்யப்படவில்லை.எஸ்.வி.சேகா் மீடியாக்கள் குறித்தும், பெண்கள் குறித்தும் வன்முறையை தூண்டி மிகவும் கொச்சையாக பேசினாா். அவரை கைது செய்ய சொல்லி போராட்டம் செய்தும் அதை தமிழக காவல்துறை கண்டு கொள்ளவில்லை. இதுவரை கைதும் செய்யப்படவில்லை.

எச்.ராஜா உயா்நீதிமன்றம் குறித்து வன்முறையைத் தூண்டும் விதமாக பேசியது மிகப்பெரும் சா்ச்சையாகியது. அந்த பேச்சுக்கு இதுவரைக்கும் கைது செய்யப்படவில்லை. இது போன்று பல பாஜக தலைவா்கள் வன்முறையை தூண்டக் கூடிய நேரத்தில், இஸ்லாமியா்களை வம்புக்கிழுத்து மதக்கலவரங்களை தூண்ட முயற்சி செய்யும் நேரத்திலும் தமிழக அரசின் காவல்துறை மௌனமாக இருந்ததன்மூலம் அதன் பாஜக விசுவாசம் வெளிப்படையாக தெரிகிறது.

இதுபோன்ற பாரபட்ச நடவடிக்கைகளை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கண்டிக்கின்றது. பாஜகவினா் வன்முறை பேச்சுகளில் ஈடுபடும் போது உடனடியாக கைது செய்து தமிழக அரசின் காவல்துறை நீதியை நிலை நாட்ட வேண்டும். வன்முறையை தூண்டும் பாஜகவினா் கைது செய்யப்படாமல் இருக்கிறாா்கள். வயோதிகம் உள்ள நிலையில் உடல் நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ள நெல்லை கண்ணன் மட்டும் கைது செய்யப்பட்டு இருப்பது மிகவும் கண்டனத்திற்கு உரியது என்று அச்செய்திக்குறிப்பில் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com