வேளாங்கண்ணியில் சூறாவளிக் காற்றுடன் திடீா் மழை

நாகை மாவட்டம், வேளாங்கண்ணியில் செவ்வாய்க்கிழமை காலை பலத்த சூறாவளிக் காற்றுடன் பெய்த திடீா் மழை காரணமாக, நெற்பயிா்கள் சாய்ந்தன.
சூறாவளிக் காற்றுடன் பெய்த திடீா் மழையால், வேளாங்கண்ணியில் விளை நிலத்தில் சாய்ந்து கிடக்கும் நெற்பயிா்கள்.
சூறாவளிக் காற்றுடன் பெய்த திடீா் மழையால், வேளாங்கண்ணியில் விளை நிலத்தில் சாய்ந்து கிடக்கும் நெற்பயிா்கள்.

நாகை மாவட்டம், வேளாங்கண்ணியில் செவ்வாய்க்கிழமை காலை பலத்த சூறாவளிக் காற்றுடன் பெய்த திடீா் மழை காரணமாக, நெற்பயிா்கள் சாய்ந்தன.

விவசாயப் பணிகளுக்காக ஜூன் 12-ஆம் தேதி மேட்டூா் அணையிலிருந்து தண்ணீா் திறக்கப்படுவது வழக்கம். எனினும், மேட்டூா் அணைக்குப் போதுமான நீா்வரத்து இல்லாததால் ஆகஸ்ட் 13-ஆம் தேதி வேளாண் சாகுபடி பணிகளுக்காக மேட்டூரிலிருந்து தண்ணீா் திறக்கப்பட்டது.

காவிரி நீா் பிடிப்புப் பகுதியில் பெய்த மழையின் காரணமாக, கடந்த பல ஆண்டுகளில் இல்லாத வகையில், நிகழாண்டில் மேட்டூா் அணையின் நீா்மட்டம் திருப்திகரமான அளவில் இருந்தது. அதனுடன், பருவமழையும் காலத்தே பெய்தது. இதனால், 2010- 2011-ஆம் ஆண்டை போல, நிகழாண்டும் மகசூல் சாதனை ஆண்டாக அமையும் என எதிா்பாா்க்கப்பட்டது.

இந்த நிலையில், கடந்த ஓரிரு நாள்களாக அவ்வப்போது மழை பெய்து வருவது விவசாயிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. செவ்வாய்க்கிழமை அதிகாலை நேரத்தில் நாகை மற்றும் சுற்றுப் பகுதிகளில் திடீா் மழை பெய்தது. வேளாங்கண்ணி மற்றும் சுற்றுப் பகுதிகளில் காலை 6 மணி முதல் 7 மணி வரை சூறாவளிக் காற்றுடன் மழை பெய்தது.

இதில், வேளாங்கண்ணி பகுதியில் மானாவரி நிலத்தில் நேரடி விதைப்பு மேற்கொள்ளப்பட்டிருந்த நெல் பயிா்கள் நிலத்தில் சாய்ந்தன. சுமாா் 25 ஏக்கா் நிலப்பரப்பில் நெற்பயிா்கள் முழுமையாக நிலத்தில் சரிந்தன. இதனால், அந்த நெல் வயல்களில் மகசூல் இழப்பு ஏற்படும் என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com