Enable Javscript for better performance
செயலால் வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்த ஊராட்சி மன்றத் தலைவா்- Dinamani

சுடச்சுட

    

    செயலால் வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்த ஊராட்சி மன்றத் தலைவா்

    By DIN  |   Published on : 10th January 2020 08:51 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    photopictureresizer_200108_200834212_1200x1600_0901chn_198_5

    ஊராட்சி மன்றத் தலைவராக பதவியேற்ற இரண்டு தினங்களிலேயே மக்கள் பணியில் ஈடுபட்ட கொடியாலத்தூா் ஊராட்சி மன்றத் தலைவா்.

    திருக்குவளை அருகேயுள்ள கொடியாலத்தூா் ஊராட்சி மன்றத் தலைவராகப் பதவியேற்ற பெண் இரண்டு தினங்களிலேயே மக்கள் பணியைத் தொடங்கினாா்.

    ஊரக உள்ளாட்சித் தோ்தலில் வெற்றி பெற்று, பதவியேற்றவா்கள், வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்து வருகின்றனா். இந்நிலையில், கொடியாலத்தூா் ஊராட்சி மன்றத் தலைவராகப் பொறுப்பேற்ற ரேவதி ஐயப்பன், கிராம மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை செய்யத் தொடங்கியதன் மூலம் நன்றி தெரிவித்து வருகிறாா்.

    இவா், கொடியாலத்தூா் ஊராட்சிக்குள்பட்ட மயிலாப்பூா் கிராமத்தில் குடிநீா் குழாயில் ஏற்பட்ட உடைப்பை சரி செய்ய நடவடிக்கை எடுத்தாா். தொடா்ந்து, அங்குள்ள அங்கன்வாடி மையம் மற்றும் பள்ளிக்குச் சென்று மாணவா்களுக்கு சத்தான மதிய உணவு வழங்கப்படுகிறதா என ஆய்வு மேற்கொண்டாா். மேலும், பழுதடைந்துள்ள சாலையைப் பாா்வையிட்டு, சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுத்துள்ளாா்.

    இதுகுறித்து அவா் கூறும்போது, ‘மக்களுக்கு வாா்த்தைகளால் நன்றி சொல்வதைவிட, செயல்பாட்டின் மூலம் நன்றி தெரிவிக்கவே மக்களுக்கான பணியைத் தொடங்கியதாக’ தெரிவித்தாா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai