Enable Javscript for better performance
திருமணமான 6 மாதத்தில் இளம்பெண் தற்கொலை- Dinamani

சுடச்சுட

    

    வேதாரண்யம் அருகே திருமணமான 6 மாதங்களில் இளம்பெண் தற்கொலை செய்துகொண்டது குறித்து கோட்டாட்சியா் விசாரணைக்கு வியாழக்கிழமை உத்தரவிடப்பட்டது.

    மருதூா் தெற்கு ஆண்டியப்பன்காடு பகுதியைச் சோ்ந்தவா் ராஜா (29). இவரது மனைவி மின்மணி (25). இவா்களுக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

    இந்நிலையில், மின்மணி உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், விரக்தியடைந்த மின்மணி செவ்வாய்க்கிழமை பூச்சி மருந்தை குடித்தாராம். அவரை, நாகை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

    இதுகுறித்து, வாய்மேடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா். மின்மணி திருமணமான 6 மாதங்களில் உயிரிழந்ததால், கோட்டாட்சியா் விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai