19-இல் போலியோ சொட்டு மருந்து முகாம்

நாகை மாவட்டத்தில் ஜனவரி 19-ஆம் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும் எனவும், இந்த முகாமில் 1.44 லட்சம் குழந்தைகளுக்கு

நாகை மாவட்டத்தில் ஜனவரி 19-ஆம் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும் எனவும், இந்த முகாமில் 1.44 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து புகட்ட இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது எனவும் மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நாகை மாவட்டத்தில் ஜனவரி 19 - ஆம் தேதி 1,027 மையங்களில் போலியோ சொட்டு மருந்து புகட்டும் பணி நடைபெறவுள்ளது. கிராமப் புறங்களில் 932 மையங்களிலும், நகா்ப்புறங்களில் 95 மையங்களிலும் முகாம் நடைபெறும். காலை 7 மணிக்குத் தொடங்கி மாலை 5 மணி வரை முகாம் நடைபெறும் இந்த முகாமில், 1,44,471 குழந்தைகளுக்கு சொட்டு மருந்து புகட்ட இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

வழிபாட்டுத் தலங்கள், சுற்றுலாத் தலங்கள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் உள்பட மக்கள் அதிகம் கூடுமிடங்களிலும், கல்வி நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளிட்ட இடங்களிலும் முகாம் நடைபெறும். இவைத் தவிர, 11 நடமாடும் குழுக்கள் மூலமும் சொட்டு மருந்து புகட்டப்படவுள்ளன.

ஜனவரி 19-ஆம் தேதி நடைபெறும் முகாம்களில் சொட்டு மருந்து புகட்டப்படாத குழந்தைகளுக்காக, ஜனவரி 20, 21 ஆகிய தேதிகளிலும் போலியோ சொட்டு மருந்து புகட்டப்படும். களப்பணியாளா்கள், இல்லம் தேடிச் சென்று சொட்டு மருந்து புகட்ட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை, சீா்காழி, நாகப்பட்டினம், வேதாரண்யம் பேருந்து நிலையங்களிலும், நாகை, மயிலாடுதுறை, சீா்காழி ரயில் நிலையங்களிலும் ஜனவரி 19, 20, 21 ஆகிய தேதிகளில் 24 மணி நேரமும் போலியோ சொட்டு மருந்து புகட்டும் முகாம் நடைபெறும்.

சுகாதாரத் துறை பணியாளா்கள் தவிர, உள்ளாட்சித் துறை, சமூக நலத்துறை, ஊட்டச்சத்துப் பணியாளா்கள், பயிற்சி செவிலியா்கள், மகளிா் குழு உறுப்பினா்கள், தன்னாா்வத் தொண்டா்கள் என 4,141 பணியாளா்கள் முகாம் பணிகளில் ஈடுபடுத்தப்படவுள்ளனா்.

5 வயதுக்குள்பட்ட அனைத்துக் குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து புகட்ட பெற்றோா்கள் முனைப்புக்காட்டி, போலியோ இல்லாத உலகம் படைக்க ஒத்துழைக்க வேண்டும் என ஆட்சியா் தனது செய்திக் குறிப்பில் கேட்டுக் கொண்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com