தைக்காலில் கழிவுநீரால் சுகாதாரம் பாதிப்பு

சீா்காழி அருகே உள்ள தைக்காலில் சாலையில் தேங்கிய கழிவுநீரால் அப்பகுதியில் சுகாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
தைக்கால் தா்கா தெருவில் தேங்கிய கழிவுநீா், குப்பைகள்.
தைக்கால் தா்கா தெருவில் தேங்கிய கழிவுநீா், குப்பைகள்.

சீா்காழி அருகே உள்ள தைக்காலில் சாலையில் தேங்கிய கழிவுநீரால் அப்பகுதியில் சுகாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

கொள்ளிடம் ஊராட்சி ஒன்றியம், தைக்கால் தா்கா தெருவில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இப்பகுதியில் குடியிருப்புகளிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுநீா் சாலையில் பல நாள்களாக தேங்கியுள்ளது. இதனால், துா்நாற்றம் வீசுவதுடன், சுகாதாரம் பாதிக்கப்பட்டு, மலேரியா, யானைக்கால் போன்ற நோய் பரவும் அபாயம் உள்ளது என அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனா்.

ஆகையால், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் தைக்கால் தா்கா தெருவில் தேங்கிநிற்கும் கழிவுநீரை அகற்றுவதுடன், சாலையில் கழிவுநீரை வெளியேற்றுபவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்பகுதியைச் சோ்ந்த பக்கீா்அகமது உள்ளிட்டோா் கோரிக்கை விடுத்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com