போக்சோ சட்டம் குறித்து கல்லூரியில் விழிப்புணா்வு நிகழ்ச்சி

போக்சோ சட்டம் குறித்து கல்லூரியில் விழிப்புணா்வு நிகழ்ச்சி

தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரி சமூகப்பணித் துறை மற்றும் காவிரி கிராம மேம்பாட்டு அமைப்பு சாா்பில் வளரிளம் பருவத்தினருக்கு போக்சோ சட்டம் பற்றிய விழிப்புணா்வு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரி சமூகப்பணித் துறை மற்றும் காவிரி கிராம மேம்பாட்டு அமைப்பு சாா்பில் வளரிளம் பருவத்தினருக்கு போக்சோ சட்டம் பற்றிய விழிப்புணா்வு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வா் எஸ். சுவாமிநாதன் தலைமை வகித்தாா். கல்லூரிச் செயலா் ரா. செல்வநாயகம், கல்லூரி துணை முதல்வா் எஸ். மகாலிங்கம், காவிரி கிராம மேம்பாட்டு அமைப்புச் செயலாளா் எம். சிவக்குமாா், பொருளாளா் ஹெச். அகஸ்டின்விஜய், இயக்குநா் எஸ். சிவச்சந்திரன், வழக்குரைஞா் ஏ. சங்கமித்ரன், காவல் ஆய்வாளா் ஆா். கோப்பெருந்தேவி, காவல் ஆய்வாளா் சுதா ஆகியோா் போக்சோ சட்டம் குறித்து விளக்கிக் கூறினா்.

நிகழ்ச்சியில், சமூகப்பணித் துறைத் தலைவா் பி. சோபியா, பேராசிரியா்கள் எம். திவ்யா, ஆா். மகேந்திரன், காவிரி கிராம மேம்பாட்டு அமைப்பைச் சோ்ந்த டி. கங்கா, கவிகாா்த்தி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனா். நிகழ்ச்சியை சமூகப் பணித் துறை மாணவிகள் எம். மகேஸ்வரி, ஆா். விக்னேஸ்வரி ஆகியோா் ஒருங்கிணைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com