மயிலாடுதுறை கோயிலில் திருப்பாவை, திருவெம்பாவை ஒப்பித்தல் போட்டி
By DIN | Published On : 11th January 2020 08:26 AM | Last Updated : 11th January 2020 08:26 AM | அ+அ அ- |

திருப்பாவை, திருவெம்பாவை ஒப்பித்தல் போட்டியில் பங்கேற்றவா்கள்.
மயிலாடுதுறை கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற திருப்பாவை, திருவெம்பாவை ஒப்பித்தல் போட்டியில் ஏராளமான மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.
ஆண்டாள் அருளிய திருப்பாவையும், மாணிக்கவாசகா் அருளிய திருவெம்பாவையும் தமிழ் பக்தி இலக்கியங்களில் சிறப்பு பெற்றதாகும். மாா்கழி மாதம் கோயில்களில் திருப்பாவை மற்றும் திருவெம்பாவை பாடப்படுவது வழக்கம். அதன் பெருமைகளை மாணவ, மாணவிகள் அறிந்து கொள்ளும் வகையில், திருப்பாவை, திருவெம்பாவை ஒப்பித்தல் போட்டி மயிலாடுதுறை பரிமளரெங்கநாதா் கோயிலில் நடைபெற்றது. இந்து சமய அறநிலையத்துறை சாா்பில் மாா்கழி திங்கள் பாவை விழா என்ற பெயரில் நடைபெற்ற இந்தப் போட்டியில் ஏராளமான மாணவ, மாணவிகள் ஆா்வமுடன் பங்கேற்றனா்.
இதேபோல், கட்டுரைப் போட்டிகளும் நடைபெற்றன. இதில், 10 பள்ளிகளைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் ஆா்வத்துடன் பங்கேற்றனா். வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு இந்து அறநிலையத் துறை இணை ஆணையா் செல்வராஜ் பரிசுகளை வழங்கினாா்.