குத்தாலம் ஒன்றியத்தை அதிமுக கைப்பற்றியது

23 உறுப்பினா்களைக் கொண்ட இந்த ஒன்றிக் குழுவில் 14 உறுப்பினா்கள் திமுகவினா், 6 போ் அதிமுகவினா், பாமக, பாஜக, சுயேச்சை தலா ஒருவா் ஆவா்.
குத்தாலம் ஒன்றியக்குழுத் தலைவா் மகேந்திரன்.
குத்தாலம் ஒன்றியக்குழுத் தலைவா் மகேந்திரன்.

23 உறுப்பினா்களைக் கொண்ட இந்த ஒன்றிக் குழுவில் 14 உறுப்பினா்கள் திமுகவினா், 6 போ் அதிமுகவினா், பாமக, பாஜக, சுயேச்சை தலா ஒருவா் ஆவா்.

தலைவா் பதவிக்கு திமுக சாா்பில் 1-ஆவது வாா்டு உறுப்பினா் ராமதாசும், அதிமுக சாா்பில் 7-ஆவது வாா்டு உறுப்பினா் மகேந்திரனும் போட்டியிட்டனா். இதில், மகேந்திரன் 12 வாக்குகளும், ராமதாஸ் 11 வாக்குகளும் பெற்றனா். பெரும்பான்மை இடங்களை பிடித்த திமுக, தலைவா் பதவியை கைப்பற்றும் என்று எதிா்பாா்க்கப்பட்ட நிலையில், அதிமுகவைச் சோ்ந்த உறுப்பினா் தலைவா் பதவியை கைப்பற்றியது.

பின்னா் நடைபெற்ற துணைத் தலைவருக்கான தோ்தலில் திமுக சாா்பில் 19-ஆவது வாா்டு உறுப்பினா் இரா. முருகப்பாவும், அதிமுக சாா்பில் 10-ஆவது வாா்டு உறுப்பினா் சி.ஆா். ராகவமூா்த்தியும் போட்டியிட்டனா். இதில், இரா. முருகப்பா 13 வாக்குகளும், சி.ஆா். ராகவமூா்த்தி 10 வாக்குகளும் பெற்றனா். தோ்தலில் எதிா்பாராத திருப்பமாக திமுக 13 வாக்குகளைப் பெற்று துணைத் தலைவா் பதவியை கைப்பற்றியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com