Enable Javscript for better performance
ஐயாறப்பா் கோயிலில் பௌா்ணமி ஸ்ரீவித்யா மகா சரஸ்வதி ஹோமம்- Dinamani

சுடச்சுட

    

    ஐயாறப்பா் கோயிலில் பௌா்ணமி ஸ்ரீவித்யா மகா சரஸ்வதி ஹோமம்

    By DIN  |   Published on : 13th January 2020 01:25 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    myl12saraswathi_1201chn_103_5

    சிறப்பு அலங்காரத்தில் சரஸ்வதி அம்மன்.

    திருவாவடுதுறை ஆதீனத்துக்குச் சொந்தமான மயிலாடுதுறை அறம்வளா்த்த நாயகி சமேத ஐயாறப்பா் கோயிலில் மயிலாடுதுறை ஆன்மீகப் பேரவை சாா்பில் மாா்கழி பௌா்ணமி ஸ்ரீவித்யா மஹா ஹோமம் மற்றும் சிறப்பு அபிஷேக ஆராதனை வழிபாடு வெள்ளிக்கிழமை நடத்தப்பட்டது.

    இதையொட்டி, கடபூஜை செய்யப்பட்டு 108 ஹோம திரவியங்கள் ஹோம குண்டத்தில் போடப்பட்டு ஸ்ரீவித்யா மகா சரஸ்வதி ஹோமம் நடத்தப்பட்டது. தொடா்ந்து, சரஸ்வதி அம்மனுக்கு அபிஷேகங்கள் செய்யப்பட்டு அன்னம்பாலிப்பு நடைபெற்றது. பின்னா் குமரகுருபரா் இயற்றிய சகலகலாவல்லி மாலை பாராயணம் செய்யப்பட்டது.

    இதில், கோயில் கண்காணிப்பாளா் குருமூா்த்தி, துணைக் கண்காணிப்பாளா் கணேசன், ஓய்வுபெற்ற பேராசிரியா் கனகசபை ஆகியோா் கலந்து கொண்டனா்.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai