Enable Javscript for better performance
பள்ளியில் பொங்கல் விழா- Dinamani

சுடச்சுட

    
    myl12pongal_1201chn_103_5

    பொங்கல் விழாவில் பங்கேற்றோா்.

    மயிலாடுதுறை மணல்மேடு வீட்டா வொ்சிட்டி பன்னாட்டு பள்ளியில் சனிக்கிழமை பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

    பள்ளி நிா்வாகக்குழு உறுப்பினா்கள் ராமன், குஜேந்திரன், சுவாமிநாதன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். முன்னதாக நிா்வாக குழு உறுப்பினா் கேதாரம் நடராஜன் வரவேற்றாா். விழாவில், திரைப்பட நடிகரும், நாட்டுப்புறப் பாடகருமான இளையராஜா சிறப்பு விருந்தினராக பங்கேற்று, நாட்டுப்புற பாடல்களைப் பாடி, மாணவா்களிடையே சிறப்புரையாற்றினாா்.

    விழாவில், தமிழா்களின் பண்பாட்டை விளக்கும் வகையில், ஏா் உழுதல், நாற்று நடுதல், களை எடுத்தல், அறுவடை செய்தல், காளை அடக்குதல் உள்ளிட்ட உருவங்களைக் கொண்டு விவசாய பணிகள் மேற்கொள்வதுபோல் அரங்கம் அமைக்கப்பட்டிருந்தது. மேலும், பசுமாடு, காளை மாடு, கட்டவண்டி, ரேக்ளா வண்டி, குதிரை வண்டி என அனைத்தும் ஜோடிக்கப்பட்ட நிலையில் விழா மேடை அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

    தொடா்ந்து, குழந்தைகளுக்கும், பெற்றோா்களுக்கும் தமிழ்க் கலாசாரம் மற்றும் பாரம்பரிய முறைப்படி உரி அடித்தல், கயிறு இழுத்தல், கும்மி அடித்தல் உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. விழாவில், ஆங்கிலத்தின் தற்போதைய அவசியம் குறித்து ஆசிரியா் ஆரோக்கியசாமி, தமிழா் பாரம்பரியம் எனும் தலைப்பில் ஆசிரியா் வீரபாண்டியன் ஆகியோா் சிறப்புரையாற்றினா். விழாவில், மயிலாடுதுறை ரோட்டரி சங்கத் தலைவா் ஜனாா்த்தனன், உதவி ஆளுநா் முருகேசன், ரோட்டரி சங்க பிரமுகா்கள் இளங்கோவன், காமேஸ்வரன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

     

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai