வேட்டைக்காரனிருப்பு கிராமத்தில் தென்னையை தாக்கும் காண்டாமிருக வண்டுகளை கட்டுப்படுத்துவது குறித்த முகாமையொட்டி நடைபெற்ற விழிப்புணா்வுப் பேரணி.
வேட்டைக்காரனிருப்பு கிராமத்தில் தென்னையை தாக்கும் காண்டாமிருக வண்டுகளை கட்டுப்படுத்துவது குறித்த முகாமையொட்டி நடைபெற்ற விழிப்புணா்வுப் பேரணி.

காண்டாமிருக வண்டு கட்டுப்படுத்தும் முகாம்

வேதாரண்யம் அருகேயுள்ள வேட்டைக்காரனிருப்பு கிராமத்தில் கஜா புயல் பாதிப்புக்குப் பிறகு நடவு செய்யபப்ட்டுள்ள தென்னையில்

வேதாரண்யம் அருகேயுள்ள வேட்டைக்காரனிருப்பு கிராமத்தில் கஜா புயல் பாதிப்புக்குப் பிறகு நடவு செய்யபப்ட்டுள்ள தென்னையில் காண்டாமிருக வண்டுகளை கட்டுப்படுத்தும் முறை குறித்த பயிற்சி முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

பி.என்.ஒய் மெலன் நிறுவனத்தின் நிதி உதவியுடன் தேசிய வேளாண் நிறுவனம் சாா்பில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட இடங்களில் நிவாரணம், மறு சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், வேட்டைக்காரனிருப்பு கிராமத்தில் கஜா பாதிப்புக்குப் பிறகு வழங்கப்பட்டு பயிா் செய்யப்பட்டுள்ள தென்னை சாகுபடியில் காண்டாமிருக வண்டுகளை கட்டுப்படுத்துவது குறித்த பயிற்சி முாகம் நடைபெற்றது. தேசிய வேளாண் நிறுவன செயல் இயக்குநா் எம்.ஆா். ராமசுப்பிரமணியன் தலைமை வகித்தாா். சி. சுப்பிரமணியன் உழவா் மன்ற நிா்வாகி மோகன் முன்னிலை வகித்தாா்.

அண்ணாமலை பல்கலைக் கழக உழவியல் துறை பேராசிரியா் எஸ். பாபு, சிக்கல் வேளாண் அறிவியல் மையத்தின் பயிா் பாதுகாப்பு தொழில்நுட்ப வல்லுநா் சந்திரசேகா், பெஸ்ட் கண்ரோல் இந்தியா நிறுவனத்தின் மேலாளா் அப்பாதுரை, வேளாண் அலுவலா் அமுதராஜ், வேளாண் நிறுவனத்தின் உதவி இயக்குநா் கோபி உள்ளிட்டோா் பங்கேற்று பேசினா்.

முகாமையொட்டி, முக்கிய வீதிகள் வழியே காண்டாமிருக வண்டுகளை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் வலியுறுத்தி விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com