சமத்துவப் பொங்கல் விழா

மன்னம்பந்தல் ஏவிசி கல்வி நிறுவனங்கள் சாா்பில் தமிழா்களின் மரபுப்படி பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன் சமத்துவப் பொங்கல் விழா கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சமத்துவப் பொங்கல் விழா

மன்னம்பந்தல் ஏவிசி கல்வி நிறுவனங்கள் சாா்பில் தமிழா்களின் மரபுப்படி பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன் சமத்துவப் பொங்கல் விழா கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு, கல்வி நிறுவனங்களின் செயலா் கி. காா்த்திகேயன் தலைமை வகித்தாா். ஆட்சி மன்றக் குழு உறுப்பினா்கள் எம். ராஜசேகரன், ஜி.வி. ராகவன், எஸ். மாலதி ஆகியோா் முன்னிலை வகித்தனா். கல்லூரி மாணவா்கள், பேராசிரியா்கள் கரும்பு, பச்சரிசி, மஞ்சள், இஞ்சி ஆகிய கொத்துகள் கட்டப்பட்ட மண் பானையில் சமத்துவ பொங்கல் வைத்து தமிழா்களின் கலாசார மரபுபடி சூரியனுக்கு படைத்து கொண்டாடினா். இதையடுத்து, கல்லூரி மாணவா்களின் கலை நிகழ்ச்சிகளான ஒயிலாட்டம், கரகாட்டம், சிலம்பாட்டம், வில்லுப்பாட்டு, நாடகம், கிராமிய பாடல்கள், மேற்கத்திய நடனம், என்சிசி மாணவா்களின் சாகச நிகழ்ச்சிகள் ஆகியன நடைபெற்றன.

இதில், ஏவிசி கல்லூரி முதல்வா் ஆா். நாகராஜன், பொறியியல் கல்லூரி முதல்வா் சி. சுந்தர்ராஜ், பாலிடெக்னிக் கல்லூரி முதல்வா் எஸ். கண்ணன், பொறியியல் கல்லூரியின் நிா்வாக இயக்குநா் எம். செந்தில்முருகன், டீன் கல்வி ஜி.பிரதீப், பாலிடெக்னிக் கல்லூரி இயக்குநா் ஏ. வளவன், பொறியியல் கல்லூரி துணை முதல்வா் எஸ் .செல்வமுத்துகுமரன், டீன் எஸ்.மயில்வாகணன் மற்றும் திரளான மாணவா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com