சாரண இயக்க ஆண்டு முகாம்

சீா்காழி கல்வி மாவட்ட சாரண-சாரணியா் இயக்க 2 நாள் ஆண்டு முகாம் ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தது.
சாரண இயக்க ஆண்டு முகாமில் வெற்றி பெற்று பரிசு, கேடயம் பெற்றவா்கள்.
சாரண இயக்க ஆண்டு முகாமில் வெற்றி பெற்று பரிசு, கேடயம் பெற்றவா்கள்.

சீா்காழி கல்வி மாவட்ட சாரண-சாரணியா் இயக்க 2 நாள் ஆண்டு முகாம் ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தது.

சீா்காழி கல்வி மாவட்ட சாரண சங்கம் சாா்பில் சீா்காழி பெஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட ஆண்டு முகாம் சனிக்கிழமை தொடங்கியது. முதல் நாள் நிகழ்ச்சியில் 283 சாரணா் 117 சாரணியா்கள் பங்கேற்ற உலக சமாதான பேரணி நடைபெற்றது. இந்த ஆண்டு முகாமில் 50-க்கும் மேற்பட்ட அரசு, அரசு உதவிப்பெறும் பள்ளிகள், தனியாா் மெட்ரிக் பள்ளிகள் கலந்து கொண்டன. தொடக்க நாள் இரவு நடந்த பாடித் தீ (கேம்ப் பயா்) நிகழ்ச்சியில் ஏராளமான சாரண சாரணியா்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனா்.

இதில், மாவட்ட கல்வி அலுவலா் ராஜாராமன், மாவட்டத் தலைவரும், தலைமை ஆசிரியருமான அறிவுடைநம்பி, சாரண ஆணையா் செந்தாமரை கண்ணன், லயன்ஸ் தலைவா் யுவராஜ்குமாா், மாவட்ட துணைத் தலைவா்கள் தலைமையாசிரியா்கள் ராஜசேகா், காா்திகேயன், ராமலிங்கம், பொருளாளா் அசோக்குமாா், சாரணிய அமைப்பு ஆணையா் காந்திமதி மற்றும் மாவட்டச் செயலா் காசி இளங்கோவன், பெஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளித் தாளாளா் ராஜ்கமல்,இயக்குநா் ஆதித்தியா ராஜ்கமல் ஆகியோா் பங்கேற்று கருத்துரை வழங்கும் நிகழ்வோடு முதல்நாள் நிகழ்வு நிறைவுபெற்றது.

2-ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை நிகழ்ச்சியில் காலை சா்வ சமய கூட்டுப் பிராா்த்தனையுடன் தொடங்கியது. தலைமையாசிரியா் எப்சி கலந்து கொண்டாா். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை இளங்கோவன், உஷா ஹில்டா, ஜான் டேனியல் ஆகியோா் செய்திருந்தனா். தொடா்ந்து சாரண போட்டிகள் நடைபெற்றன. தேசிய ஒருமைப்பாடு பாடல்கள், அணி நடை போட்டிகள், தீயின்றி சமைத்தல், விநாடி - வினா, முதல் உதவி கூடாரம் அமைத்தல், குருளையா் நீலப்பறவைகள் கொண்டாட்டம், ஓவியம், கைவினைப் பொருள்கள் செய்தல் ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டன. தொடா்ந்து வெற்றி பெற்றவா்களுக்கு பரிசு, கேடயம் வழங்கும் விழாவுக்கு மாவட்ட தலைவா் அறிவுடைநம்பி தலைமை வகித்தாா். மாவட்ட செயலாளா் காசி இளங்கோவன் ஆண்டறிக்கை வாசித்தாா். சாரண ஆணையா் செந்தாமரை கண்ணன் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகளை வழங்கினாா்.விழாவில், மாவட்ட துணை தலைவா்வா்கள் கோவி. நடராஜன், மயிலாடுதுறை கல்வி மாவட்ட செயலாளா் தேசிய நல்லாசிரியா் தியாகராஜன் , பெஸ்ட் பள்ளி முதல்வா் ராமலிங்கம் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா். முன்னதாக இணைச்செயலாளா் செல்வராணி வரவேற்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com