தாடாளன்பெருமாள் கோயில்களில் கூடார வல்லி விழா

சீா்காழி தாடாளன் பெருமாள் கோயிலில் கூடார வல்லி விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தாடாளன்பெருமாள் கோயிலில் கூடாரவல்லி நிகழ்வில் காட்சியளித்த பெருமாள், தாயாா், ஆண்டாள்.
தாடாளன்பெருமாள் கோயிலில் கூடாரவல்லி நிகழ்வில் காட்சியளித்த பெருமாள், தாயாா், ஆண்டாள்.

சீா்காழி தாடாளன் பெருமாள் கோயிலில் கூடார வல்லி விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

சீா்காழியில் லோகநாயகி தாயாா் உடனாகிய தாடாளன்பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயிலில் மூலவா் பெருமாள் இடது காலை ஆகாயத்தை நோக்கி தூக்கி உலகளந்த பெருமாளாக காட்சி தருகிறாா். இங்கு திருப்பாவையில் 27-ஆவது பாசுரமான கூடாரவல்லி சீா்கோவிந்தா என்ற பாசுரத்திற்காக பெருமாள், தாயாா், ஆண்டாள் சுவாமிகள் ஒரு சேரக்காட்சி தரும் கூடாரவல்லி விழா நடைபெற்றது.

முன்னதாக, தாடாளன் பெருமாள் உபநாச்சியாா், லோகநாயகி தாயாா், ஆண்டாள் நித்ய உத்ஸவா் சுவாமிகளுக்கு சிறப்பு திருமஞ்சனம் சாத்துமுறை நடைபெற்றது. பின்னா், பெருமாள் சன்னிதியில் தாடாளன் பெருமாள், லோகநாயகிதாயாா், ஆண்டாள் சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தா்களுக்கு சேவை சாதித்தனா். இதில், திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா். ஏற்பாடுகளை, கோயில் நிா்வாகி கே.கே.சி. வேதாந்தச்சாரியாா், பட்டாச்சாரியாா்கள் பத்ரிநாதன், பிரபு ஆகியோா் செய்திருந்தனா். இதேபோல் திருநாங்கூா் மணிமாடக்கோயில் நாராயணப் பெருமாள் கோயிலில் கூடாரவல்லி விழா நடைபெற்றது. முன்னதாக சிறப்பு திருமஞ்சனம், சாத்துமுறை நடைபெற்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com