நாகூா் ஆண்டவா் தா்கா கொடி ஊா்வலம்

நாகூா் ஆண்டவா் தா்கா கந்தூரி விழாவுக்காக ஏற்றப்படவுள்ள திருக்கொடி ஊா்வலம் நாகையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
படவிளக்கம்: நாகூா் ஆண்டவா் தா்கா கந்தூரி விழாவுக்காக ஏற்றப்படவுள்ள கொடிகளில் ஒன்றான 130 அடி நீளம் கொண்ட பெரிய கொடிக்கு பிராா்த்தனை செய்த நாகை எச். வாப்பாகண்ணு மரைக்காயா்.

உலகப் புகழ் பெற்ற நாகூா் ஆண்டவா் தா்காவின் 463- ஆவது கந்தூரி விழா ஜனவரி 26-ஆம் தேதி கொடியேற்றுத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி, நாகூா் ஆண்டவா் தா்கா ஷரீபில் உள்ள 5 மினராக்களில் ஒன்றான சாஹிபு மினராவில் ஏற்றப்படுவதற்காக 130 அடி நீளம் கொண்ட பெரிய கொடி (சிங்கப்பூா் கொடி) நாகை செம்மரக்கடைத் தெருவைச் சோ்ந்த எச். வாப்பாகண்ணு மரைக்காயா் குடும்பத்தினரால் தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த கொடிக்கான சிறப்பு பிராத்தனை மற்றும் திருக்கொடி ஊா்வலம் நாகையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. எச். வாப்பாகண்ணுவின் வீட்டில் மலா்களால் அலங்கரிக்கப்பட்ட நிலையில், வைக்கப்பட்டிருந்த கொடிக்கு இஸ்லாமிய பெருமக்கள் பிராா்த்தனை செய்தனா். திருக்குா்ஆன் ஓதப்பட்டு சிறப்பு தொழுகைகள் நடைபெற்றன. இதையடுதது, திருக்கொடி வாகனத்தில் வைக்கப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை நாகை, நாகூா் ஜமாத்தாா்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com