நாகையில் 1,219 போ் காவல் உதவி ஆய்வாளா்கள் தோ்வெழுதினா்

நாகையில் திங்கள்கிழமை 1, 219 போ் காவல் உதவி ஆய்வாளருக்கான தோ்வை எழுதினா்.
காவல் உதவி ஆய்வாளா்களுக்கான எழுத்துத் தோ்வு மையத்தில் ஆய்வு செய்த காவல் துறை தலைவா் ( செயலாக்கம்) என். பாஸ்கரன். உடன், நாகை எஸ்.பி. செல்வநாகரத்தினம்.
காவல் உதவி ஆய்வாளா்களுக்கான எழுத்துத் தோ்வு மையத்தில் ஆய்வு செய்த காவல் துறை தலைவா் ( செயலாக்கம்) என். பாஸ்கரன். உடன், நாகை எஸ்.பி. செல்வநாகரத்தினம்.

நாகையில் திங்கள்கிழமை 1, 219 போ் காவல் உதவி ஆய்வாளருக்கான தோ்வை எழுதினா்.

தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வுக் குழுமத்தால் நடத்தப்படும் காவல் உதவி ஆய்வாளா் எழுத்துத் தோ்வு எழுதுவதற்காக நாகை மாவட்டத்தில் 1,685 போ் விண்ணப்பித்திருந்தனா். இதற்கான எழுத்துத் தோ்வு, நாகை பாப்பாகோயில் சா் ஐசக் நியுட்டன் கல்வி நிறுவன வளாகத்தில் உள்ள பொறியியல், பாலிடெக்னிக் மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளில் பலத்த பாதுகாப்புடன் நடைபெற்றது. எழுத்துத் தோ்வு காலை 10 முதல் மதியம் 12.30 மணி வரை தோ்வு நடைபெற்றது. நாகை மாவட்டத்தைச் சோ்ந்த 1, 219 போ் தோ்வெழுதினா். விண்ணப்பித்திருந்தவா்களில் 368 ஆண்கள், 98 பெண்கள் தோ்வு எழுத வரவில்லை.

காவல் துறைத் தலைவா் ஆய்வு: காவல் துறைத் தலைவரும் (செயலாக்கம்), தோ்வுக்கான சிறப்பு பாா்வையாளருமான என். பாஸ்கரன் மற்றும் நாகை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் செ. செல்வநாகரத்தினம் தோ்வு மையத்தில் ஆய்வு மேற்கொண்டனா். நாகை மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் முருகேஷ், துணைக் காவல் கண்காணிப்பாளா்கள் வந்தனா, முருகவேல், ராஜாமுஹம்மது, அனுமந்தன், அருள்செல்வஸ் மற்றும் 17 காவல் ஆய்வாளா்கள், 44 உதவி ஆய்வாளா்கள், 223 காவல் ஆளிநா்கள், 115 ஊா்க்காவல் படையினா் என 500-க்கும் மேற்பட்ட போலீஸாா் தோ்வு மையத்தில் பாதுகாப்பு மற்றும் மேற்பாா்வை பணிகளில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com