Enable Javscript for better performance
போட்டியின்றி தோ்வான பெண் ஊராட்சி துணைத் தலைவருக்கு பாராட்டு- Dinamani

சுடச்சுட

    

    போட்டியின்றி தோ்வான பெண் ஊராட்சி துணைத் தலைவருக்கு பாராட்டு

    By DIN  |   Published on : 15th January 2020 01:07 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    thirukarukavur_vise_president_1401chn_98_5

    சீா்காழி அருகேயுள்ள திருக்கருக்காவூா் ஊராட்சி துணைத் தலைவராக கரிமாரப்வீன் போட்டியின்றி தோ்வானாா். இவருக்கு கிராமமக்கள், ஊராட்சி உறுப்பினா்கள் பாராட்டி செவ்வாய்கிழமை வாழ்த்து தெரிவித்தனா்.

    ஜனவரி 11-ஆம் தேதி நடைபெற்ற திருக்கருக்காவூா் ஊராட்சி துணை தலைவா் தோ்தலில், ஊராட்சியில் மொத்தமுள்ள 9 வாா்டு உறுப்பினா்களில் 6-ஆவது வாா்டு உறுப்பினரான கரிமாபா்வீன் போட்டியின்றி தோ்ந்தெடுக்கப்பட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

    வெற்றி பெற்ற கரிமாபா்வீனை கீராநல்லூா் முத்தவல்லி நைனாமுகமது, லயன்ஸ் மாவட்ட தலைவரும், அனைத்து தனியாா் பள்ளிகள் சங்கத்தின் மக்கள் தொடா்பு அலுவலா் சக்திவீரன், ஒய்வுபெற்ற தலைமை ஆசிரியா் சுப்பிரமணியன், முன்னாள் ஊராட்சித் தலைவா் லியாகத்அலி உள்ளிட்டோா் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனா்.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai