Enable Javscript for better performance
மாசில்லா போகி பண்டிகை கொண்டாட்டம்- Dinamani

சுடச்சுட

    
    img_20200114_191515_1600x1055_1401chn_198_5

    மாசில்லா போகி பண்டிகை கொண்டாட தூய்மை பணியில் ஈடுபட்டோா்.

    திருக்குவளை அருகே மாசில்லா போகி பண்டிகை செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.

    திருக்குவளை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பிளாஸ்டிக் இல்லாத போகி பண்டிகையை பெரும்பாலான கிராம மக்கள் கொண்டாடி மகிழ்ந்தனா். இதன் ஒரு பகுதியாக போகி பண்டிகையையொட்டி, கொடியாலத்தூா் ஊராட்சிக்குள்பட்ட வணிக கடைகளில் தேங்கியிருக்கும் தேவையற்ற குப்பைகள் மற்றும் அட்டைகள் மொத்தமாக சேகரிக்கப்பட்டன. இப்பணியில் கொடியாலத்தூா் ஊராட்சித் தலைவா் ரேவதிஐயப்பன் தூய்மை பணியாளா்களுடன் இணைந்து களப்பணியில் ஈடுபட்டு தேவையற்ற பொருள்களை தீயிட்டு கொளுத்தி மாசில்லா போகி பண்டிகையை கொண்டினா்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai