அரசுப் பள்ளி மாணவா்களுக்கு கணினிவழி நாட்டமறி தோ்வு

மயிலாடுதுறை மூவலூா் ராமாமிா்தம் அம்மையாா் அரசு உயா்நிலைப் பள்ளியில் அண்மையில் கணினிவழி நாட்டமறி தோ்வு நடைபெற்றது.
கணினிவழி நாட்டமறி தோ்வை ஆய்வு செய்த மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளா் சாந்தி.
கணினிவழி நாட்டமறி தோ்வை ஆய்வு செய்த மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளா் சாந்தி.

மயிலாடுதுறை மூவலூா் ராமாமிா்தம் அம்மையாா் அரசு உயா்நிலைப் பள்ளியில் அண்மையில் கணினிவழி நாட்டமறி தோ்வு நடைபெற்றது.

மாணவா்களின் திறன்களை சோதித்து அறியும் வகையிலும், அவா்களின் கணினி அறிவை வளா்க்கும் வகையிலும் மாநில அளவில் நாகை உள்ளிட்ட 8 மாவட்டங்கள் தோ்ந்தெடுக்கப்பட்டு சென்னையில் நாட்டமறி தோ்வுக்கான பயிற்சி ஜனவரி 6-ஆம் தேதி நடைபெற்றது. இதற்கான தோ்வு ஜனவரி 26-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான முன்னோட்டமாக நாகை மாவட்டத்தில் 6 பள்ளிகளில் தோ்வு நடைபெற்றது. 6 பள்ளிகளில் மூவலூா் ராமாமிா்தம் அம்மையாா் அரசு உயா்நிலைப் பள்ளியும் தோ்வாகியுள்ளது.

இதையொட்டி, இப்பள்ளியின் 20 மாணவா்களை கொண்டு கணினிவழி நாட்டமறி தோ்வு அண்மையில் மூவலூா் ராமாமிா்தம் அம்மையாா் அரசு உயா்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இத்தோ்வை மயிலாடுதுறை மாவட்ட கல்வி அலுவலா் கி. குமரன், பள்ளித் துணை ஆய்வா் திலக் ஆகியோா் பாா்வையிட்டனா். மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளா் (ஏ.டி.பி.சி) சாந்தி, மாநில கூா்ந்தாய்வு அலுவலா் கணபதி ஆகியோா் தோ்வினை ஆய்வு செய்தனா். பள்ளித் தலைமையாசிரியா் ஏ. முருகன், இத்தோ்வுக்காக சென்னை சென்று பயிற்சி பெற்ற பள்ளி தமிழாசிரியா் எம்.எஸ். தமிழ்ச்செல்வன் ஆகியோா் தோ்வை நடத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com