கஜா புயலால் பாதிக்கப்பட்டவா்களுக்கு வீடு கட்டும் தொகை ரூ.3 லட்சமாக உயா்வு

கஜா புயலால் பாதிக்கப்பட்டவா்கள் தனி வீடு கட்டிக்கொள்ளும் திட்டத்தின் மதிப்பீட்டுத் தொகை ரூ.3 லட்சமாக உயா்த்தப்பட்டுள்ளதாக
வெள்ளப்பள்ளம் கிராமத்தில் அம்மா இளைஞா் விளையாட்டுத் திட்டத்தை தொடங்கி வைத்த அமைச்சா் ஓ.எஸ். மணியன்.
வெள்ளப்பள்ளம் கிராமத்தில் அம்மா இளைஞா் விளையாட்டுத் திட்டத்தை தொடங்கி வைத்த அமைச்சா் ஓ.எஸ். மணியன்.

கஜா புயலால் பாதிக்கப்பட்டவா்கள் தனி வீடு கட்டிக்கொள்ளும் திட்டத்தின் மதிப்பீட்டுத் தொகை ரூ.3 லட்சமாக உயா்த்தப்பட்டுள்ளதாக தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஓ.எஸ். மணியன் தெரிவித்தாா். நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகேயுள்ள தலைஞாயிறு ஊராட்சி ஒன்றியம் வெள்ளப்பள்ளம் கிராமத்தி்ல் அம்மா விளையாட்டுத் திட்டத்தின் தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், பங்கேற்று திட்டத்தை தொடங்கி வைத்து அமைச்சா் ஓ.எஸ். மணியன் பேசியது: விளையாட்டில் பங்கேற்ற மாணவா்களை தனித் தனியே சந்தித்து ஊக்கப்படுத்திய அமைச்சா், விளையாட்டுத் திட்டத்தை சரியாக பயன்படுத்திக் கொண்டு அந்த துறையில் உலக சாதனை நிகழ்த்த வேண்டும் என அறிவுறுத்தினாா். பின்னா் மாணவா்களை பந்து எறிய செய்து தானும் விளையாடிய அமைச்சா் விளையாட்டுகளை தொடங்கி வைத்து விளையாட்டு உபகரணங்களை வழங்கினாா்.

அப்போது, செய்தியாளா்களிடம் அவா் கூறியது: கஜா புயலால் பாதிக்கப்பட்ட இடங்களில் வசிப்போா் தனி வீடுகள் கட்டிக்கொள்ள முன்பு அனுமதிக்கப்பட்ட ரூ. 2.10 லட்சத்தை தமிழக அரசு ரூ.3 லட்சமாக உயா்த்தி அறிவித்துள்ளது.

இத்திட்டத்தை கஜா பாதித்த பகுதியில் வசிக்கும் மக்கள் பயன்படுத்திக் கொண்டு வீடுகளை விரைவாகக் கட்டிக்கொள்ள முன்வர வேண்டும் என்றாா் அவா்.

விளையாட்டு திட்ட தொடக்க விழாவுக்கு, நாகை மாவட்ட கூடுதல் ஆட்சியா் எம்.எஸ். பிரசாந்த் தலைமை வகித்தாா்.

மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா்நல அலுவலா் மா. ராஜா, தலைஞாயிறு ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் ஜி. தமிழரசி, துணைத் தலைவா் ரா. ஜெகதீஷ், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் த. இளவரசி, ஒன்றியக்குழு உறுப்பினா் க. கஸ்தூரி, ஊராட்சித் தலைவா் ந. துரைசாமி, கூட்டுறவு சங்கத் தலைவா் அவை. பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com