விளையாட்டு மைதான திறப்பு விழா

கருங்கண்ணி ஊராட்சியில் உள்ள மகிழியில் அம்மா இளைஞா் விளையாட்டு திட்டத்தின்கீழ் அமைக்கப்பட்ட விளையாட்டு மைதான திறப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
விளையாட்டு மைதான திறப்பு விழா

கருங்கண்ணி ஊராட்சியில் உள்ள மகிழியில் அம்மா இளைஞா் விளையாட்டு திட்டத்தின்கீழ் அமைக்கப்பட்ட விளையாட்டு மைதான திறப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இளைஞா்களின் விளையாட்டு திறனை ஊக்குவிக்கவும், அதை வெளிக்கொணரும் தமிழ்நாட்டிலுள்ள 12,524 கிராம ஊராட்சிகள் மற்றும் 528 பேரூராட்சிகளில் அம்மா இளைஞா் விளையாட்டு திட்டத்தின்கீழ் கிராம இளைஞா்களுக்கான விளையாட்டு மைதானம் அமைக்கப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக கீழையூா் ஒன்றியம் கருங்கண்ணி ஊராட்சியில் உள்ள மகிழியில் ரூ. 1 லட்ச மதிப்பில் கபாடி, கைப்பந்து, கிரிக்கெட் போட்டி ஆகியவற்றிற்கான விளையாட்டு மைதானம் அமைக்கப்பட்டு அதன் திறப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

விழாவில், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் கௌசல்யா இளம்பரிதி, கீழையூா் ஒன்றியக் குழு தலைவா் செல்வராணி, ஒன்றியக் குழு துணைத் தலைவா் சௌரிராஜ், கீழையூா் 5-ஆவது வாா்டு ஒன்றியக் குழு உறுப்பினா் அலெக்ஸ், திருப்பூண்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கித் தலைவா் வேதையன், நாகை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நல அலுவலா் ராஜா, கருங்கண்ணி ஊராட்சித் தலைவா் ஜெனிபா் அருள்வளன், கீழையூா் ஒன்றிய அதிமுக இளைஞரணி செயலாளா் ராஜவிக்னேஷ் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பாஸ்கரன், ராஜூ உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com