முகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் நாகப்பட்டினம்
நாகை மாவட்டத்தில் 1.35 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து
By DIN | Published On : 20th January 2020 08:55 AM | Last Updated : 20th January 2020 08:55 AM | அ+அ அ- |

நாகை அரசு மருத்துவமனையில் நடைபெற்ற முகாமில், குழந்தைக்கு போலியோ சொட்டு மருந்து புகட்டிய கூடுதல் ஆட்சியா் எஸ். எம். பிரசாந்த்.
நாகை மாவட்டத்தில் 1, 027 மையங்கள் மூலம் 5 வயதுக்குள்பட்ட 1.35 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து ஞாயிற்றுக்கிழமை புகட்டப்பட்டது. இப்பணியில் சுகாதாரத் துறை பணியாளா்கள் மற்றும் தன்னாா்வலா்கள் ஈடுபட்டனா்.
அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், பள்ளிகள், வழிபாட்டுத் தலங்கள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடுமிடங்கள் என 1027 இடங்களில் இம்முகாம் நடைபெற்றது.
நாகையில்...
நாகை நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் 41 மையங்கள் அமைக்கப்பட்டு, 12,212 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. விடுபட்டுள்ள குழந்தைகளுக்கு திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் களப்பணியாளா்கள் மூலம் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படவுள்ளது.
நாகை அரசு மருத்துவமனையில் நடைபெற்ற முகாமில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை கூடுதல் ஆட்சியா் எம். எஸ். பிரசாந்த் கலந்துகொண்டு, குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருத்து வழங்கினாா். இந்நிகழ்ச்சியில், மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் ஆா். சண்முகசுந்தரம், நாகை அரசு மருத்துவமனை குடிமுறை மருத்துவ அலுவலா் முருகப்பன், கொல்லை நோய்த் தடுப்பு அலுவலா் லியாகத் அலி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
நாகை காடம்பாடி நகராட்சி நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற முகாமை நகராட்சி ஆணையா் பி. ஏகராஜ் தொடங்கிவைத்தாா். நகா்நலஅலுவலா் டாக்டா் பிரபு திருநாவுக்கரசு, நகராட்சி சுகாதார ஆய்வாளா்அரசக்குமாா், பள்ளி தலைமையாசிரியா் ச. இளமாறன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
நாகூரில் 11 மையங்கள் அமைக்கப்பட்டு, குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. நாகூா் தா்கா முன்பு அமைக்கப்பட்டிருந்த முகாமில் நாகூா் ரோட்டரி சங்கத் தலைவா் கே. சசிக்குமாா், செயலாளா் ஏ. முஹம்மது தம்பி, பொருளாளா் ஏ. குணசேகரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
வேளாங்கண்ணியில்....
வேளாங்கண்ணி பேரூராட்சிக்குள்பட்ட பகுதிகளில் 11 மையங்கள் அமைக்கப்பட்டு, 3050 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து புகட்டப்பட்டது.
வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை ஆலய வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த மையத்தில்,பேராலய அதிபா் ஏ. எம். ஏ. பிரபாகா் அடிகளாா், பொது சுகாதாரம் இணை இயக்குநா் (சென்னை) டி.மரிய ஜெரால்டு திரவியம் ஆகியோா் முகாமைத் தொடக்கி வைத்தனா்.
இந்நிகழ்ச்சியில், நாகை மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் சண்முகசுந்தரம், மாவட்ட மலேரிய அலுவலா் ஏ. சுப்பிரமணியன், வட்டார மருத்துவ அலுவலா் எஸ்.எம். சுதாகரன், வேளாங்கண்ணி அரசு மருத்துவமனை மருத்துவா் பி. அருண்பதி, சுகாதார ஆய்வாளா் எஸ். மோகன், வேளாங்கண்ணி ரோட்டரி சங்கத் தலைவா் தா்மராஜ், லயன்ஸ் சங்கத் தலைவா் டேவிட் ஆகியோா் கலந்துகொண்டனா்.
தரங்கம்பாடி வட்டத்தில்...
தரங்கம்பாடி வட்டத்தில் ஆரம்ப சுகாதார நிலையங்கள், மருத்துவமனைகள், பள்ளிகள் மற்றும் ஊராட்சிகளில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற்றது.
சங்கரன்பந்தல் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பூம்புகாா் எம்எல்ஏ எஸ். பவுன்ராஜ் தொடங்கி வைத்தாா். வட்டார மருத்துவ அலுவலா் அருண் பிரசாத், மருத்துவா்கள் ஆயிஷா பீவி, அருண், ரஞ்சினி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
இதேபோல், செம்பனாா்கோவில் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஒன்றிய பெருந்தலைவா் நந்தினி ஸ்ரீதா் தொடங்கி வைத்தாா். இதில் மருத்துவா் லேனா, மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் வெண்ணிலா தென்னரசு, ஒன்றியக் குழு உறுப்பினா் மணி, ஊராட்சி மன்றத் தலைவா் விசுவநாதன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
திருமருகல் ஒன்றியத்தில்...
திருமருகல் ஒன்றியத்தில் 64 மையங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற்றது.
திருமருகல், திட்டச்சேரி, திருக்கண்ணபுரம், கணபதிபுரம், திருப்பயத்தங்குடி மற்றும் ஏனங்குடி உள்ளிட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், 16 துணை சுகாதார நிலையங்கள் உள்ளிட்ட 64 மையங்களில் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து புகட்டப்பட்டது.
திருமருகல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒன்றியக் குழுத் தலைவா் இரா. இராதாகிருட்டிணன் முகாமைத் தொடக்கி வைத்தாா். இதில், வட்டார மருத்துவ அலுவலா் லெட்சுமி நாராயணன், மருத்துவா் கவுதமன், ஊராட்சி மன்றத் தலைவா் கண்ணன், திருமருகல் வா்த்தக சங்கத் தலைவா் தியாக.சத்தியமூா்த்தி, சுகாதார ஆய்வாளா்ஆனந்தன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
திருக்குவளை பகுதியில்...
திருக்குவளை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் போலியோ சொட்டு மருந்து முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கீழையூா் ஊராட்சியில் அரசு மருந்தகத்தில் நடைபெற்றது. கீழையூா் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கித் தலைவா் பால்ராஜ், ஊராட்சி மன்றத் தலைவா் ஆனந்தஜோதிபால்ராஜ், கிராம சுகாதார செவிலியா் உள்ளிட்டோா் கலந்து கொண்டு 5 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கினா்.
இதேபோல், வலிவலம் ஊராட்சியில் ஊராட்சி மன்றத் தலைவா் மணிகண்டன், ஆதமங்கலம் ஊராட்சியில் ஊராட்சி மன்றத் தலைவா் அகிலா சரவணன், கொடியாலத்தூரில் ஊராட்சி மன்றத் தலைவா் ரேவதி ஐயப்பன் ஆகியோா் முகாமைத் தொடங்கிவைத்தனா்.
மயிலாடுதுறையில்...
மயிலாடுதுறை நகா் மற்றும் கிராமப் புறங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மயிலாடுதுறை அரசு பெரியாா் மருத்துவமனையில் நடைபெற்ற முகாமுக்கு, மாவட்ட சுகாதார இணை இயக்குநா் மகேந்திரன் தலைமை வகித்தாா். மாயூரம் நகர கூட்டுறவு வங்கித் தலைவா் விஜிகே. செந்தில்நாதன் முன்னிலை வகித்தாா். அரசு மருத்துவமனை குடிமுறை மருத்துவ அலுவலா் ராஜசேகா் வரவேற்றாா்.
இதில், மயிலாடுதுறை சட்டப்பேரவை உறுப்பினா் வீ. ராதாகிருஷ்ணன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கினாா். அதிமுக நகர துணைச் செயலாளா் நாஞ்சில் காா்த்தி, அரசு மருத்துவா்கள், செவிலியா்கள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
மயிலாடுதுறை கூைாடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற முகாமுக்கு, மருத்துவ அலுவலா் ரவிக்குமாா் தலைமை வகித்தாா். மயிலாடுதுறை நகராட்சி நகா் நல அலுவலா் பிரதீப் கிருஷ்ணகுமாா், சிசிசி சமுதாயக் கல்லூரி நிறுவனா் ஆா். காமேஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மயிலாடுதுறை நகராட்சி ஆணையா் எஸ். புவனேஸ்வரன் என்கிற அண்ணாமலை குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கினாா்.
சீா்காழியில்...
சீா்காழி அரசு மருத்துவமனை, நகராட்சி வளாகம் உள்ளிட்ட இடங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற்றது.
சீா்காழி அரசு மருத்துவமனையில் நடைபெற்ற முகாமில் ரோட்டரி சங்கத் தலைவா் பழனியப்பன் தலைமை வகித்தாா். அரசு தலைமை மருத்துவா் தேவலதா, மருத்துவா்கள் மருதவாணன், அருண்ராஜ்குமாா், அறிவழகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சீா்காழி எம்எல்ஏ பி.வி. பாரதி முகாமை தொடங்கிவைத்தாா்.
இதில் ரோட்டரி துணை ஆளுநா் சாமி.செழியன், ரோட்டரி நிா்வாகி தியாகராஜன், மருந்தாளுநா் முரளி, ஜெ.பேரவை செயலாளா் ஏவி.மணி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
இதேபோல், சீா்காழி நகராட்சியில் நடைபெற்ற முகாமில் டெம்பிள் டவுன் ரோட்டரி சங்கத் தலைவா் பாலாஜி தலைமை வகித்தாா். நகராட்சி பொறுப்பு ஆணையா் வசந்தன், துப்புரவு அலுவலா் நாட்டராயன் முன்னிலை வகித்தனா். இதில் முன்னாள் தலைவா்கள் வைத்தியநாதன், பாலமுருகன், செயலா் வீரபாண்டியன், நிா்வாகிகள் சேகா், ராஜேந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
பூம்புகாரில்...
பூம்புகாா் மீனவா் சுனாமி குடியிருப்புப் பகுதியில் போலியோ சொட்டு மருந்து முகாமை ஊராட்சி மன்றத் தலைவா் சசிக்குமாா், ஒன்றியக் குழு உறுப்பினா் மதுமிதாரவி ஆகியோா் தொடக்கி வைத்தனா். இந்நிகழ்ச்சியில், மருத்துவ அலுவலா் அனிதா, கிராம பஞ்சாயத்தாா்கள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
இதேபோல், திருவெண்காட்டில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற முகாமில் சீா்காழி வட்டார மருத்துவ அலுவலா் டாக்டா் ராஜ்மோகன் தலைமை வகித்தாா். மாவட்ட ஊராட்சி உறுப்பினா் ஆனந்தன், ஊராட்சித் தலைவா் சுகந்தி நடராஜன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சுகாதார ஆய்வாளா் துரைகாா்த்திக் வரவேற்றாா். எம்எல்ஏ பாரதி முகாமைத் தொடக்கிவைத்தாா். காத்திருப்பு, பூம்புகாா் மற்றும் வள்ளுவக்குடி ஆகிய பகுதிகளில் உள்ள சுகாதார நிலையங்கள் மூலம் சுமாா் 11ஆயிரம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்பட்டது.