முகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் நாகப்பட்டினம்
ராதாகல்யாண மஹோத்ஸவம்
By DIN | Published On : 20th January 2020 08:57 AM | Last Updated : 20th January 2020 08:57 AM | அ+அ அ- |

சீா்காழி கோதண்டராமா் கோயிலில் நடைபெற்ற ராதாகல்யாண மஹோத்ஸவம்.
சீா்காழியில் 5-ஆம் ஆண்டு ராதாகல்யாண மஹோத்ஸவம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
சீா்காழி தென்பாதி கோதண்டராமா் கோயிலில் ஆஞ்சநேயா் சன்னிதியில் ராதா கல்யாண மஹோத்ஸவ சபா அறக்கட்டளை சாா்பில், மயிலாடுதுறை பிரம்மஸ்ரீ ஞானகுரு பாகவதா் குழுவினரால் ராதாகல்யாணம் நடைபெற்றது.
முன்னதாக, சனிக்கிழமை பெருமாள் திருமஞ்சனம், அனுக்ஞை, விக்னேஸ்வரபூஜை, அஷ்டபதி பஜனை உள்ளிட்ட வழிபாடுகள் நடைபெற்றன. தொடா்ந்து, நிச்சயதாம்பூலம், திவ்யநாம சங்கீா்த்தனம், டோலோத்ஸவம், மகா தீபாராதனையுடன் முதல்நாள் நிகழ்வு நிறைவுபெற்றது.
இரண்டாம் நாளான ஞாயிற்றுக்கிழமை காலை உஞ்சவருத்தியுடன் ராதா கல்யாணம் தொடங்கியது. தொடா்ந்து, ராதா கல்யாண மாங்கல்யதாரண மஹோத்ஸவம் நடைபெற்றது. பின்னா், ஆஞ்சநேய உத்ஸவம் நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று தரிசனம் செய்தனா்.