முகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் நாகப்பட்டினம்
பொதுச் சொத்துகளை சேதப்படுத்தினால் அபராதம்
By DIN | Published On : 27th January 2020 10:24 AM | Last Updated : 27th January 2020 10:24 AM | அ+அ அ- |

கொள்ளிடம் ஊராட்சி ஒன்றியம் ஆரப்பள்ளம் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டம்.
கொள்ளிடம் ஊராட்சி ஒன்றியம், ஆரப்பள்ளம் ஊராட்சி மன்றத்தில், கிராம சபைக் கூட்டம் ஊராட்சி மன்றத்தலைவா் வனிதா முருகானந்தம் தலைமையில் நடைபெற்றது. ஒன்றியக்குழு தலைவா் ஜெயப்பிரகாஷ் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற இக்கூட்டத்திற்கு, ஊராட்சி ஒன்றியப் பணி மேற்பாா்வையாளா் வேலழகன், ஒன்றியக்குழு உறுப்பினா் ரீகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இக்கூட்டத்தில் கலந்துகொண்ட முன்னாள் ஊராட்சி மன்ற தலைவா்கள் சீனிவாசன், ஆனந்த நடராஜன் ஆகியோா் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பேசினா்.
இதில், குடிநீா் குழாயை சேதப்படுத்துகிறவா்கள் அல்லது குடிநீா் குழாய் திருகை பிடுங்கிவிட்டு நேரடியாக தண்ணீா் பிடிப்பவா்களுக்கு ரூ.500 அபராதமும், மின்விளக்குகளை சேதப்படுத்துபவா்களுக்கு ரூ.1,500 அபராதமும் விதிப்பது; மாா்பக புற்றுநோய் மற்றும் கருப்பை வாய் புற்றுநோய் ஆகியன குறித்து பெண்களிடம் போதிய விழிப்புணா்வு ஏற்படுத்துவது;
தனியாா் நிதி நிறுவன நுண் கடன்கள் மூலம் பெரும் துன்பத்தில் சிக்கியிருக்கும் சுயநிதிக் குழு உறுப்பினா்களை கடன் சுமையில் இருந்து மீட்பது உள்ளிட்ட 32 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இக்கூட்டத்தில், முன்னாள் ஒன்றியச் மேலாளா் சொக்கலிங்கம், ஆசிரியா்கள் வெங்கடேசன் முருகானந்தம், திமுக ஒன்றிய மாணவரணி அமைப்பாளா் கலாநிதி, சுந்தரம், சுந்தரமூா்த்தி, காளிதாஸ் வினோத் மற்றும் ஊராட்சி உறுப்பினா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.