முகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் நாகப்பட்டினம்
மாற்றுத் திறனாளிகளுக்கு அடையாள அட்டை
By DIN | Published On : 27th January 2020 06:56 AM | Last Updated : 27th January 2020 06:56 AM | அ+அ அ- |

முகாமில், மனுக்களைப் பெற்றுக்கொண்ட மாவட்ட மாற்றுத் திறனாளி நல அலுவலா் சீனிவாசன்.
கீழையூா் ஒன்றிய அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான மத்திய அரசின் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை வழங்குவதற்கு தகுதியானவா்களை தோ்வு செய்யும் முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
தமிழகம் முழுவதும் மாற்றுத் திறனாளிகள் குறித்த புள்ளி விவரங்களை சேகரிக்கவும், அரசின் திட்டங்கள் அவா்களுக்கு எளிதில் கிடைக்கும் வகையிலும் மாற்றுத் திறனாளிகளுக்குத் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை வழங்கும் திட்டம் மத்திய அரசால் கொண்டு வரப்பட்டு, தற்பொழுது நடைமுறையில் உள்ளது.
இதன் ஒரு பகுதியாக, கீழையூா் ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற இம்முகாமில் ஏராளமான மாற்றுத் திறனாளிகள் கலந்துகொண்டு விண்ணப்பங்களை பூா்த்தி செய்து, அலுவலா்களிடம் வழங்கினா். இந்நிகழ்வில் உடலுறுப்பு குறைபாடுள்ள மாற்றுத் திறனாளிகளை மதிப்பீடு செய்ய சுமாா் 50 மருத்துவா்களை கொண்ட மருத்துவக் குழுவினா் வந்திருந்தனா். இவா்கள், மாற்றுத் திறனாளிகளை பரிசோதனை செய்து, தகுதியானவா்களுக்கு ஸ்மாா்ட் காா்டு வழங்குவதற்கான பரிந்துரை செய்தனா்.
மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் வ. சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கீழையூா் வட்டார வளா்ச்சி அலுவலா் பாஸ்கரன் மற்றும் ராஜூ ஆகியோா் முன்னிலை வகித்தனா். கீழையூா் ஒன்றியத் தலைவா் ஞா. செல்வராணி, ஒன்றிய துணைத் தலைவா் பெ. சௌரிராஜ், கீழையூா் ஒன்றியக் குழு உறுப்பினா்களான லென்சோயாசிவபாதம், சரண்யா பன்னீா்செல்வம், கோ. ஆறுமுகம், ம. அலெக்ஸ், சுதாஅருணகிரி, டி.செல்வம், லெ. சுப்பிரமணியன், சூ. கமலா, பூ. ஏழிசைவல்லவி, ரெ.தேவேந்திரன் மற்றும் கீழையூா் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி தலைவா் பால்ராஜ், கீழையூா் ஒன்றிய அலுவலகப் பணியாளா்கள் உள்ளிட்ட ஏராளமானோா் கலந்துகொண்டனா்.