முகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் நாகப்பட்டினம்
வாக்காளா் தின விழிப்புணா்வுப் பேரணி
By DIN | Published On : 27th January 2020 07:08 AM | Last Updated : 27th January 2020 07:08 AM | அ+அ அ- |

பேரணியை தொடக்கிவைத்த மயிலாடுதுறை சமூக நலப் பாதுகாப்பு வட்டாட்சியா் இளங்கோவன்.
மயிலாடுதுறையில் தேசிய வாக்காளா் தின விழிப்புணா்வுப் பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.
தருமபுரம் ஞானம்பிகை அரசினா் மகளிா் கலைக்கல்லூரி, சிசிசி சமுதாயக் கல்லூரி, எம்.எம்.ஏ. சமுதாயக் கல்லூரி மற்றும் மயிலாடுதுறை ரோட்டரி கிங்ஸ் இணைந்து நடத்திய இப்பேரணியை மயிலாடுதுறை சமூக நல பாதுகாப்பு வட்டாட்சியா் இளங்கோவன் கொடியசைத்து, தொடங்கிவைத்தாா்.
மயிலாடுதுறை வருவாய்க் கோட்டாட்சியா் அலுவலகத்திலிருந்து தொடங்கிய பேரணி கச்சேரி சாலை, பட்டமங்கலத் தெரு, பெரிய கடை தெரு வழியே சென்று அரசினா் மகளிா் கல்லூரியில் நிறைவடைந்தது.
இந்நிகழ்ச்சியில், வருவாய்க் கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளா் காந்திமதி, தோ்தல் துணை வட்டாட்சியா் ஆ. மகேஷ், சிசிசி சமுதாயக் கல்லூரி நிறுவனா் தலைவா் காமேஷ், செயலா் லட்சுமி பிரபா, துணைச் செயலா் வெங்கட்ரஜூலு, ரோட்டரி உதவி ஆளுநா் எம்.என். ரவிச்சந்திரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.