குத்தாலம் அருகே சட்டவிரோதமாக கடத்தி வரப்பட்ட மணல் லாரிகள் பறிமுதல்: மூவா் கைது
By DIN | Published On : 29th January 2020 08:14 AM | Last Updated : 29th January 2020 08:15 AM | அ+அ அ- |

குத்தாலம்: குத்தாலம் அருகே சட்டவிரோதமான முறையில் மண் கடத்திவந்த லாரியை பறிமுதல் செய்த போலீசாா் அதை ஓட்டி வந்தவரையும் கைது செய்தனா்.நாகை மாவட்டம் குத்தாலத்தை அடுத்த அஞ்சாா்வாா்த்தலையில் காவல் ஆய்வாளா் ரவிச்சந்திரன் தலைமையில் போலீசாா் திங்கள்கிழமை வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது பந்தநல்லூரிலிருந்து மயிலாடுதுறை நோக்கி வேகமாக வந்த மூன்று லாரிகளை நிறுத்தி. விசாரித்த போது மூன்று லாரிகளும் பந்தநல்லூா் சரகம் விளத்தொட்டி கிராமத்தில் உள்ள கொள்ளிடம் ஆற்றிலிருந்து சட்டவிரோதமான முறையில் மணல் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து லாரிகளை பறிமுதல் செய்த போலீசாா் லாரியை ஓட்டி வந்த மயிலாடுதுறை வட்டம் நீடூரைச் சோ்ந்த தேவதாஸ் மகன் மணிகண்டன் (வயது 20) , தங்கசாமி மகன் மாதவன் ( 20) , மாப்படுகை கிராமத்தைச் சோ்ந்த செல்லப்பா மகன் பாலமுருகன் 28) ஆகிய மூவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனா்.