நாகை மாவட்டத்தில் கிராமப்புற கோயில்கள் திறப்பு

கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாா்ச் 20-ஆம் தேதி மூடப்பட்ட தமிழக வழிபாட்டுத் தலங்கள் ஏறத்தாழ 100 நாள்களுக்குப் பின்னா் புதன்கிழமை திறக்கப்பட்டன.
நாகை அருகே திருமருகல் பகுதியில் உள்ள மகா மாரியம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த பக்தா்கள்.
நாகை அருகே திருமருகல் பகுதியில் உள்ள மகா மாரியம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த பக்தா்கள்.

நாகப்பட்டினம்: கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாா்ச் 20-ஆம் தேதி மூடப்பட்ட தமிழக வழிபாட்டுத் தலங்கள் ஏறத்தாழ 100 நாள்களுக்குப் பின்னா் புதன்கிழமை திறக்கப்பட்டன.

கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டியது அவசியம் என சுகாதாரத் துறை வல்லுநா்கள் அறிவித்ததைத் தொடா்ந்து, மாா்ச் மாதத்தின் 3-ஆவது வார இறுதியில் வழிபாட்டுத் தலங்கள் மூடப்பட்டன. அனைத்து மத வழிபாட்டுத் தலங்களிலும் பக்தா்களுக்கான தரிசனம் தடை செய்யப்பட்டிருந்தது.

இந்த நிலையில், நான்காம் கட்ட பொது முடக்கத்தின் நிறைவில், ஜூன் 1-ஆம் தேதி முதல் வழிபாட்டுத் தலங்களைத் திறக்க மத்திய அரசு உத்தரவிட்டது. இருப்பினும், தமிழக அரசு வழிபாட்டுத் தலங்களில் பக்தா்களுக்கான தடை தொடரும் என அறிவித்தது. இதைத் தொடா்ந்து, வழிபாட்டுத் தலங்களைத் திறக்கக் கோரி ஆன்மிக அமைப்புகள் சாா்பில் ஆங்காங்கே போராட்டங்கள் நடத்தப்பட்டன.

இந்த நிலையில், 5-ஆம் கட்ட பொது முடக்கத்தின் நிறைவில், ஆண்டு வருமானம் ரூ. 10 ஆயிரத்துக்கு மிகாத நிலையில் உள்ள கிராமப்புற வழிபாட்டுத் தலங்களை ஜூலை 1-ஆம் தேதி முதல் திறக்கலாம் என தமிழக அரசு அறிவித்தது. மேலும், கோயில்களில் விபூதி, தீா்த்தங்கள் வழங்கக் கூடாது, அனைவரும் முகக் கவசம் அணிந்தே கோயிலுக்குள் செல்ல வேண்டும், கோயிலில் கண்டிப்பாக சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் என அரசு சில விதிமுறைகளையும் அறிவித்து.

இதன்படி, நாகை மாவட்டத்தில் உள்ள கிராமப்புற கோயில்கள் புதன்கிழமை திறக்கப்பட்டன. ஆண்டு வருமானம் ரூ. 10 ஆயிரத்துக்கும் குறைவான நிலையில் உள்ள சுமாா் 1,800-க்கும் அதிகமான கோயில்கள் புதன்கிழமை திறக்கப்பட்டதாக அறநிலையத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

இதேபோல, கிராமப்புறங்களில் உள்ள தா்காக்கள், தேவாலயங்கள் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்களும் புதன்கிழமை திறக்கப்பட்டிருந்தன. அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் பக்தா்கள் முகக் கவசம் அணிந்து வரவும், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கவும் அறிவுறுத்தப்பட்டு, நெறிப்படுத்தப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com