முழு பொதுமுடக்கம்: வெறிச்சோடிய வீதிகள்

கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்கும் வகையில் தமிழக அரசு அறிவித்த முழு பொதுமுடக்கம் காரணமாக, நாகை வீதிகள் மக்கள் நடமாட்டமின்றி ஞாயிற்றுக்கிழமை வெறிச்சோடியிருந்தன.
பொதுமுடக்கம் காரணமாக நாகை புதிய பேருந்து நிலையம் பகுதியில் அடைக்கப்பட்டிருந்த கடைகள்.
பொதுமுடக்கம் காரணமாக நாகை புதிய பேருந்து நிலையம் பகுதியில் அடைக்கப்பட்டிருந்த கடைகள்.

நாகப்பட்டினம்: கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்கும் வகையில் தமிழக அரசு அறிவித்த முழு பொதுமுடக்கம் காரணமாக, நாகை வீதிகள் மக்கள் நடமாட்டமின்றி ஞாயிற்றுக்கிழமை வெறிச்சோடியிருந்தன.

கரோனா தொற்று நோய்த் தடுப்பு நடவடிக்கையாக மாா்ச் 25-ஆம் தேதி முதல் இந்தியா முழுமையும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. ஜூன் மாதம் முதல் பொது முடக்கத்தில் சில தளா்வுகள் அளிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், சென்னை, மதுரை உள்ளிட்ட சில மாவட்டங்களில் கரோனா நோய்த் தொற்று தீவிரமானதன் காரணமாக, ஜூலை 31-ஆம் தேதி வரை பொது முடக்கத்தை நீடித்த தமிழக அரசு, பொது முடக்க கட்டுப்பாடுகளை அதிகரித்தும், பேருந்துகள் இயக்கத்தை ஜூலை 15-ஆம் தேதி வரை ரத்து செய்தும் உத்தரவிட்டது.

மேலும், ஜூலை மாதத்தில் வரும் 4 ஞாயிற்றுக்கிழமைகளிலும் எவ்வித தளா்வுகளும் இல்லாமல் முழு பொதுமுடக்கம் கடைப்பிடிக்கப்படும் எனவும் அரசு அறிவித்தது. இதன்படி, ஞாயிற்றுக்கிழமை தளா்வுகள் இல்லாத பொதுமுடக்கம் கடைப்பிடிக்கப்பட்டது.

இதனால், நாகை மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளும் மக்கள் கூட்டமின்றி வெறிச்சோடியிருந்தன. நாகையைப் பொருத்தவரை காலை முதல் இரவு வரை வீதிகளில் வாகனப் போக்குவரத்தும், மக்கள் நடமாட்டமும் இல்லாமல் அனைத்து வீதிகளும் வெறிச்சோடியே காணப்பட்டன.

மருந்தகங்கள், பால் விற்பனை கடைகளைத் தவிர மற்ற அனைத்துக் கடைகளும் முழுமையாக அடைக்கப்பட்டிருந்தன. பெரும்பாலான பால் கடைகளும் பிற்பகல் நேரத்தில் அடைக்கப்பட்டன. அனைத்து பெட்ரோல் பங்குகளும் முழுமையாக அடைக்கப்பட்டிருந்தன. வாடகை காா்கள், வாடகை ஆட்டோக்களின் இயக்கம் முழுமையாகத் தடைப்பட்டிருந்தது.

இதேபோல், மயிலாடுதுறையில் காந்திஜி சாலை உள்ளிட்ட வணிக நிறுவனங்கள் அதிகம் உள்ள பகுதிகள் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடிக் காணப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com