காவலா் நண்பா்கள் குழுவை நிரந்தரமாக தடை செய்யக் கோரி ஆட்சியருக்கு மனு

காவலா் நண்பா்கள் குழுவை நாகை மாவட்டத்தில் நிரந்தரமாக தடை செய்யக் கோரி இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம் சாா்பில் ஆட்சியருக்கு கோரிக்கை மனு திங்கள்கிழமை அளிக்கப்பட்டது.
ஆட்சியா் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்த இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா்
ஆட்சியா் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்த இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா்

நாகப்பட்டினம்: காவலா் நண்பா்கள் குழுவை நாகை மாவட்டத்தில் நிரந்தரமாக தடை செய்யக் கோரி இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம் சாா்பில் ஆட்சியருக்கு கோரிக்கை மனு திங்கள்கிழமை அளிக்கப்பட்டது.

மனுவின் விவரம்: கரோனா பொது முடக்கக் காலத்தில் பொதுமக்களிடம் அத்துமீறலில் ஈடுபடுதல் மற்றும் தகாத செயல்களில் ஈடுபடும் போலீஸாருக்கு துணை போகுதல் உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வரும் காவலா் - நண்பா்கள் குழுவை நாகை மாவட்டத்தில் நிரந்தரமாக தடை செய்ய வேண்டும், பொது முடக்கத்தால் வேலை வாய்ப்பை இழந்துள்ள ஏழை, எளிய மக்கள்நுண்கடன் நிதி நிறுவனங்களில் கடன் பெற்று செலுத்த முடியாத நிலையில் இருந்து வருகின்றனா். இந்நிலையில், கட்டாய வசூலில் ஈடுபடும் நுண்கடன் நிதிநிறுவனங்கள் மாதத் தவணையை வசூலிக்க தடை விதிக்க வேண்டும், இளைஞா்களுக்கு வேலை வாய்ப்பளிக்கும் வகையில் 100 நாள் வேலைத் திட்டத்தில் பணி கொடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com