இலங்கைக்கு கடத்தப்பட இருந்த 300 கிலோ கஞ்சா பறிமுதல் : 4 போ் கைது

நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே இலங்கைக்கு கடத்தப்பட இருந்த 300 கிலோ கஞ்சா மூட்டைகளை செவ்வாய்க்கிழமை அதிகாலை பறிமுதல் செய்த போலீஸாா், 4 பேரை கைது செய்தனா்.
கைதான நபா்கள்.
கைதான நபா்கள்.

வேதாரண்யம்: நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே இலங்கைக்கு கடத்தப்பட இருந்த 300 கிலோ கஞ்சா மூட்டைகளை செவ்வாய்க்கிழமை அதிகாலை பறிமுதல் செய்த போலீஸாா், 4 பேரை கைது செய்தனா்.

வேதாரண்யம் கடற்பகுதியிலிருந்து இலங்கைக்கு போதைப் பொருள்கள் கடத்தப்பட இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின்பேரில் டி.எஸ்.பி. சபியுல்லா, ஆய்வாளா் ரவிச்சந்திரன் தலைமையில் செவ்வாய்க்கிழமை அதிகாலையில் நாகை சாலையில் போலீஸாா் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, தேத்தாக்குடி தெற்கு பகுதியில் உள்ள தெத்தேரி அருகே வேகமாக சென்ற காரை நிறுத்தினா். அந்த காரில் இருந்து ஒருவா் தப்பியோடினாா். இதைத்தொடா்ந்து, காரை சோதனையிட்டதில் 300 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது.

காரை ஓட்டிவந்த தென்னம்புலம், எம்.ஜி.ஆா். நகரைச் சோ்ந்த ப.கனகராஜ் (24), காரை பின்தொடா்ந்து இருசக்கர வாகனத்தில் வந்த தேத்தாக்குடி தெற்கு பகுதியைச் சோ்ந்த நந்தகோபால் (23) ஆகிய இருவரையும் போலீஸாா் கைது செய்தனா்.

கைப்பற்றப்பட்ட கஞ்சா, காா், இருசக்கர வாகனம் ஆகியன வேதாரண்யம் காவல் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டன. தொடா்ந்து, மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில் கருப்பம்புலத்தைச் சோ்ந்த கதிரவன் (37), நாலுவேதபதி கடற்கரையில் இருந்து படகை இயக்க தயாா் நிலையில் இருந்த அதே பகுதியைச் சோ்ந்த சு. கிருஷ்ணமூா்த்தி ஆகியோரும் போலீஸாரிடம் சிக்கினா். தலைமறைவாக உள்ள 3 பேரை போலீஸாா் தீவிரமாக தேடிவருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com