பொதுமக்களுக்கு காவலன் செயலியை பதிவிறக்கம் செய்து காவலர்கள் விழிப்புணர்வு

சீர்காழியில் பொதுமக்களுக்கு காவலன் செயலியை மகளிர் காவல் நிலைய காவலர்கள் பதிவிறக்கம் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
பொதுமக்களுக்கு காவலன் செயலியை பதிவிறக்கம் செய்து காவலர்கள் விழிப்புணர்வு

சீர்காழியில் பொதுமக்களுக்கு காவலன் செயலியை மகளிர் காவல் நிலைய காவலர்கள் பதிவிறக்கம் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

ஏதேனும் பெண்களுக்கு ஆபத்து ஏற்படும்போது காவலர்கள் உதவியை செல்லிடைப்பேசி வாயிலாக எளிதாக பயன்படுத்தி காவலர்கள் உதவியை உடனடியாக பெற்றிட காவலன் எஸ்ஓஎஸ் என்ற செயலியை தமிழக காவல்த்துறை அறிமுகம் செய்துள்ளது. இந்த காவலன் செயலியை ஆண்கள், பெண்கள் என பொதுமக்கள் ஒவ்வொருவரும் தங்களது செல்லிடைப்பேசியில் பதவிறக்கம் செய்துவைத்து கொள்ள வேண்டும் என காவல்த்துறை அறிவுறுத்தியுள்ளது. 

அதன்படி நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் உத்தரவின்படி, சீர்காழி டிஎஸ்பி. யுவபிரியா அறிவுறுத்தலின்படி சீர்காழி அனைத்து மகளிர் காவல்நிலைய உதவி காவல் ஆய்வாளர் காயத்திரி, காவலர்கள் மச்சவள்ளி, ஜெயசுந்தரி ஆகியோர் சீர்காழி பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்துநிலையம், பிடாரி வடக்குவீதி, கொள்ளிட முக்கூட்டு, வங்கிகள் ஆகிய பகுதிகளில் நேரிடையாக சென்று பெண்கள், ஆண்களின் செல்லிடைப்பேசியில் செயலியை பதிவிறக்கம் செய்ய அறிவுறுத்தி பதிவிறக்கம் செய்து அதன் செயல்பாடுகளை விவரித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com