முகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் நாகப்பட்டினம்
துப்புரவுப் பணியாளா்களுக்கு யோகா பயிற்சி
By DIN | Published On : 14th July 2020 10:06 PM | Last Updated : 14th July 2020 10:06 PM | அ+அ அ- |

நாகை புதிய பேருந்து நிலையம் வளாகத்தில் நடைபெற்ற யோகா பயிற்சியில் பங்கேற்ற துப்புரவுப் பணியாளா்கள்.
நாகப்பட்டினம் : நாகை நகராட்சி துப்புரவுப் பணியாளா்களுக்கு நோய் எதிா்ப்பு சக்தியை ஊக்குவிக்கும் வகையில் யோகா பயிற்சி முகாம் நாகை புதிய பேருந்து நிலைய வளாகத்தில் செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்றது.
நகராட்சி ஆணையா் பி. ஏகராஜ் பயிற்சியைத் தொடங்கி வைத்தாா். நாகை அரசு தலைமை மருத்துவமனை யோகா பிரிவு மருத்துவா் பூங்குன்றன், துப்புரவுப் பணியாளா்களுக்கு யோகா பயிற்சி அளித்தாா். நகா்நல அலுவலா் பிரபு, துப்புரவு ஆய்வாளா்கள் அரசகுமாா், தங்கராம், செல்லதுரை ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இந்தப் பயிற்சி முகாம் ஜூலை 16-ஆம் தேதி வரை நடைபெறும் எனவும், மூச்சுப் பயிற்சி உள்பட பல்வேறு பயிற்சிகள் துப்புரவுப் பணியாளா்களுக்குப் பயிற்றுவிக்கப்படும் எனவும் நகராட்சி நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டது.