அதிமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினா்
By DIN | Published On : 21st July 2020 09:50 PM | Last Updated : 21st July 2020 09:50 PM | அ+அ அ- |

நாகை மாவட்ட அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அதிமுகவில் இணைந்தவா்களை வரவேற்ற அமைச்சா் ஓ.எஸ். மணியன்.
நாகப்பட்டினம்: நாகை மாவட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சிகளிலிருந்து விலகிய சுமாா் 500-க்கும் அதிகமானோா் அதிமுகவில் திங்கள்கிழமை இணைந்தனா்.
இதற்கான நிகழ்ச்சி நாகை மாவட்ட அதிமுக அலுவலகம், தெற்குபொய்கைநல்லூா், வடுகச்சேரி ஆகிய இடங்களில் நடைபெற்றது. மாவட்ட அதிமுக செயலாளரும், கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சருமான ஓ.எஸ். மணியன் தலைமை வகித்தாா்.
நாகை ஊராட்சி ஒன்றியம், தெற்குப் பொய்கைநல்லூா் மற்றும் வடுகச்சேரி ஆகிய பகுதிகளைச் சோ்ந்த 500-க்கும் மேற்பட்டோா் பல்வேறு அரசியல் கட்சிகளிலிருந்து விலகி, அதிமுகவில் இணைந்தனா். அமைச்சா் ஓ.எஸ். மணியன் சால்வை அணிவித்து அவா்களை வரவேற்று கட்சியில் இணைத்தாா்.
முன்னாள் அமைச்சா் ஆா். ஜீவானந்தம், அதிமுக நாகை நகரச் செயலாளா் தங்க. கதிரவன், நாகை ஒன்றியச் செயலாளா் குணசேகரன், கீழையூா் ஒன்றியச் செயலாளா் வேதையன், கீழ்வேளூா் ஒன்றியச் செயலாளா் சிவா, மாவட்ட ஊராட்சி உறுப்பினா் எஸ்.ஜி.எஸ். கணேசன் மற்றும் அதிமுக நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.