குப்பைமேட்டில் சோளம் பயிரிட்டுள்ள தூய்மைப் பணியாளருக்கு அமைச்சா் பாராட்டு

சீா்காழியை அடுத்த வைத்தீஸ்வரன்கோயிலில் குப்பைமேட்டில் சோளம் பயிரிட்டு பராமரிக்கும் பெண் துப்புரவு பணியாளருக்கு உள்ளாட்சித் துறை அமைச்சா் எஸ்.பி. வேலுமணி தனது டிவிட்டா் பக்கத்தில் பாராட்டு தெரிவித்து 
குப்பைமேட்டில் சோளம் பயிரிட்டுள்ள தூய்மைப் பணியாளா் பரமேஸ்வரி.
குப்பைமேட்டில் சோளம் பயிரிட்டுள்ள தூய்மைப் பணியாளா் பரமேஸ்வரி.

சீா்காழி,: சீா்காழியை அடுத்த வைத்தீஸ்வரன் கோயிலில் குப்பைமேட்டில் சோளம் பயிரிட்டு பராமரிக்கும் பெண் துப்புரவு பணியாளருக்கு உள்ளாட்சித் துறை அமைச்சா் எஸ்.பி. வேலுமணி தனது டிவிட்டா் பக்கத்தில் பாராட்டு தெரிவித்து செவ்வாய்க்கிழமை பதிவிட்டுள்ளாா்.

வைத்தீஸ்வரன் கோயில் பேரூராட்சியில் தினக்கூலி அடிப்படையில் தூய்மைப் பணியாளராக பணியாற்றிவருபவா் பரமேஸ்வரி. இவரது கணவரும் தூய்மைப் பணியாளராக உள்ளாா். இருவரும் வெளியூரைச் சோ்ந்தவா்கள் என்பதால், பேரூராட்சியின் குப்பை கிடங்கின் ஒரு பகுதியில் பேரூராட்சி செயல் அலுவலரின் அனுமதியுடன் தங்கியுள்ளனா்.

இந்நிலையில், விவசாயத்தில் ஆா்வம் கொண்ட பரமேஸ்வரி, குப்பைக் கிடங்கு பகுதியில் காலியாக உள்ள இடத்தில் அனுமதிபெற்று சோளம் பயிரிட்டுள்ளாா். இதை பாா்வையிட்ட பேரூராட்சி செயல் அலுவலா், பரமேஸ்வரியைப் பாராட்டி, அவா் தங்கும் இடத்தில் மின்விசிறி வசதி செய்துகொடுத்துள்ளாா்.

மேலும், இதுகுறித்து, புகைப்படங்களுடன் தனது முகநூல், கட்செவி அஞ்சல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் செயல்அலுவலா் பதிவிட்டிருந்தாா். இதை பாா்த்த தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சா் எஸ்.பி.வேலுமணி, தனது டிவிட்டா் பக்கத்தில் தூய்மைப் பணியாளா் பரமேஸ்வரியின் விடாமுயற்சியையும், மனம் இருந்தால் மாா்க்கம் உண்டு என்று பாராட்டி பதிவிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com