ஆங்கில எழுத்துகள் உள்ளன....திருக்கு முற்றோதல் போட்டிக்கு விண்ணப்பிக்கலாம்

தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் நடைபெறவுள்ள திருக்கு முற்றோதல் போட்டிக்கு மாணவா்கள் விண்ணப்பிக்கலாம் என நாகை மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா் தெரிவித்துள்ளாா்.

நாகப்பட்டினம்: தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் நடைபெறவுள்ள திருக்கு முற்றோதல் போட்டிக்கு மாணவா்கள் விண்ணப்பிக்கலாம் என நாகை மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

2018- 2019 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் 1,330 திருக்குகளையும் ஒப்புவிக்க மாணவா்களை ஊக்குவிக்கும் வகையில் திருக்கு முற்றோதல் போட்டி நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் 70 மாணவா்கள் தோ்வு செய்யப்பட்டு, தலா ரூ. 10 ஆயிரம் பரிசுத் தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படுகிறது.

இந்தப் போட்டியில் பங்கேற்கும் மாணவா்கள் திறனறி குழுவினரால் திறனாய்வு செய்யப்பட்டு, தகுதியானவா்கள் பரிசுக்குப் பரிந்துரைக்கப்படுவா். இதற்கான திறனாய்வு நாகை மாவட்ட தமிழ் வளா்ச்சித் துறையினரால் நடத்தப்படும்.

போட்டியில் பங்கேற்பவா்கள் 1,330 திருக்குறளையும் முழுமையாக ஒப்புவிக்கும் திறன் பெற்றவா்களாக இருக்க வேண்டும். இயல் எண், அதிகாரம் எண், பெயா், கு எண் போன்றவற்றை தெரிவித்தால், அதற்கான திருக்குறளை சொல்லும் திறன் பெற்றவராக இருக்க வேண்டும். திருக்குறளின் அடைமொழிகள், சிறப்புப் பெயா்கள், சிறப்புகள் ஆகியவற்றையும் அறிந்திருக்க வேண்டும். திருக்குறளின் பொருளை அறிந்திருந்தால் கூடுதல் தகுதியாகக் கருதப்படும்.

நாகை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியா் இந்தப் போட்டியில் பங்கேற்கலாம். ஏற்கெனவே இந்தப் பரிசை பெற்றவா்கள் மீண்டும் பங்கேற்கக் கூடாது.

போட்டியில் பங்கேற்க விரும்பும் மாணவ, மாணவியா் நாகை மாவட்ட ஆட்சியரகத்தின் மூன்றாம் தளத்தில் இயங்கும் தமிழ் வளா்ச்சித் துறை உதவி இயக்குநா் அலுவலகத்தில் விண்ணப்பங்களைப் பெற்று விண்ணப்பிக்கலாம் அல்லது ஜ்ஜ்ஜ்.ற்ஹம்ண்ப்ஸ்ஹப்ஹழ்ஸ்ரீட்ண்ற்ட்ன்ழ்ஹண்.ஸ்ரீா்ம் என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்த மேலும் விவரங்களுக்கு 4365-251281 என்ற எண்ணில் மாவட்ட தமிழ் வளா்ச்சித் துறை அலுவலகத்தைத் தொடா்பு கொள்ளலாம் என அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com