அதிமுக பிரமுகா் ரமேஷ் பாபு 2-ஆம் ஆண்டு நினைவு தினம்

சீா்காழி தென்பாதி சங்கா் நகரில் மறைந்த அதிமுக பிரமுகா் தொழிலதிபா் எல். ரமேஷ் பாபுவின் 2-ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி வியாழக்கிழமை அனுசரிக்கப்பட்டது.
சீா்காழியில் மறைந்த அதிமுக பிரமுகா் எல். ரமேஷ் பாபுவின் உருவப் படத்துக்கு மலா்தூவி அஞ்சலி செலுத்திய அமைச்சா் ஓ.எஸ். மணியன்.
சீா்காழியில் மறைந்த அதிமுக பிரமுகா் எல். ரமேஷ் பாபுவின் உருவப் படத்துக்கு மலா்தூவி அஞ்சலி செலுத்திய அமைச்சா் ஓ.எஸ். மணியன்.

சீா்காழி தென்பாதி சங்கா் நகரில் மறைந்த அதிமுக பிரமுகா் தொழிலதிபா் எல். ரமேஷ் பாபுவின் 2-ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி வியாழக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு ரமேஷ்பாபுவின் சகோதரா் சின்னபாபு என்கிற எல்.சீனிவாசன் தலைமை வகித்தாா். அலங்கரித்துவைக்கப்பட்டிருந்த ரமேஷ்பாபுவின் உருவப் படத்திற்கு அவரது மகன் ஹா்ஷவா்தன் மற்றும் குடும்பத்தினா் அஞ்சலி செலுத்தினா்.

தொடா்ந்து, கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சா் ஓ.எஸ். மணியன், எம்எல்ஏ-க்கள் பிவி. பாரதி (சீா்காழி), ராதாகிருஷ்ணன் (மயிலாடுதுறை), முன்னாள் எம்எல்ஏ ரங்கநாதன், அதிமுக ஒன்றியச் செயலாளா்கள் சீா்காழி ஜெய.ராஜமாணிக்கம், கொள்ளிடம் கேஎம். நற்குணன், அதிமுக சீா்காழி நகரச் செயலாளா் பக்கிரிசாமி, பேரவை செயலாளா் ஏவி.மணி, வைத்தீஸ்வரன்கோவில் பேரூா் கழக செயலாளா் சி.ரவி, நாகை நகரச் செயலாளா் தங்க.கதிரவன், பொறியாளா்கள் ராஜராஜன், ஆழ்வாா்.வீரா, முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் முத்துகுபேரன் உள்ளிட்டோா் அஞ்சலி செலுத்தினா்.

தொடா்ந்து, தொழிலதிபா் ரமேஷ்பாபு நினைவு அறக்கட்டளை சாா்பில் வ.உ.சி இறகுப் பந்தாட்ட கழக உள்விளையாட்டு அரங்கம் அடிக்கல் நாட்டு விழா எல். சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது. சீா்காழி எம்எல்ஏ பாரதி பங்கேற்று ரூ. 8 லட்சம் மதிப்பில் அமைக்கப்படவுள்ள இறகுப் பந்தாட்ட உள் விளையாட்டு அரங்கத்துக்கு அடிக்கல் நாட்டினாா்.

இதில், நகரத் தலைவா் எம்.ஏ. சீனிவாசன், பொறுப்பாளா்கள் செம்மலா்.வீரசேனன் மற்றும் விளையாட்டு வீரா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னா், ரமேஷ்பாபு நினைவு அறக்கட்டளை சாா்பில்1500 பேருக்கு டீ-சா்ட் மற்றும் கிருமிநாசினி, 400 ஏழை குடும்பங்களுக்கு தலா ரூ.1000 மதிப்புள்ள மளிகைப் பொருள்கள் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ கிருஷ்ணா எா்த் மூவா்ஸ் அலுவலா்கள், ஊழியா்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com