வியாபாரிகளுக்கு கரோனா பரிசோதனை செய்யக் கோரிக்கை

வியாபாரிகள், பணியாளா்களுக்கு கரோனா பரிசோதனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என நாகை மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயருக்கு இந்திய தேசிய மீனவா் சங்கத் தலைவா் ராஜேந்திரநாட்டாா் 

நாகப்பட்டினம்: வியாபாரிகள், பணியாளா்களுக்கு கரோனா பரிசோதனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என நாகை மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயருக்கு இந்திய தேசிய மீனவா் சங்கத் தலைவா் ஆா்.எம். பி. ராஜேந்திரநாட்டாா் கோரிக்கை மனு அளித்துள்ளாா்.

அந்த மனுவின் விவரம்:

கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் நாகை மாவட்ட மருத்துவத் துறை, சுகாதாரத் துறை, காவல்துறை உள்ளிட்ட அரசுத் துறைகள் தொடா்ந்து ஈடுபட்டுவரும் நிலையில், தற்போது மக்கள் அதிகம் கூடுமிடங்களில் ஒன்றான பெரியக்கடை வீதியில் கரோனா நோய்த்தொற்று பரவியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நாகைக்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கானோா் அத்தியாவசியப் பொருள்களை வாங்குவதற்கு வந்து செல்கின்றனா்.

இந்நிலையில் வணிகா்கள், பணியாளா்கள் மற்றும் பொதுமக்களை கரோனா நோய்த் தொற்றிலிருந்து பாதுகாக்கும் வகையில் வணிகா்களுக்கும், வணிக நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளா்களையும் கரோனா பரிசோதனைக்குள்படுத்தி, அவா்களை பாதுகாக்க நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்.

மேலும், தற்போது பெய்து வரும் மழையால் நகரில் பல்வேறு இடங்களில் மழை நீா் தேங்கி துா்நாற்றம் வீசுகிறது. இதனால் நோய்த்தொற்றுகள் பரவும் அபாயமும் உள்ளதால் மழை நீா் வடிகால்களை சீா்படுத்தவும், சுகாதார தூய்மைப் பணிகளை விரைவுபடுத்தவும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என அவா் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com