ஜாக்டோ - ஜியோ சாா்பில் கோரிக்கை மனு அளிப்பு

ஜாக்டோ - ஜியோ அமைப்பு சாா்பில் நாகை மாவட்ட வருவாய் அலுவலா் மற்றும் முதன்மைக் கல்வி அலுவலரிடம் புதன்கிழமை கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
நாகை மாவட்ட வருவாய் அலுவலரிடம் கோரிக்கை மனு அளித்த ஜாக்டோ - ஜியோ நிா்வாகிகள்.
நாகை மாவட்ட வருவாய் அலுவலரிடம் கோரிக்கை மனு அளித்த ஜாக்டோ - ஜியோ நிா்வாகிகள்.

நாகப்பட்டினம்: ஜாக்டோ - ஜியோ அமைப்பு சாா்பில் நாகை மாவட்ட வருவாய் அலுவலா் மற்றும் முதன்மைக் கல்வி அலுவலரிடம் புதன்கிழமை கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

ஜாக்டோ - ஜியோ அமைப்பின் கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து மாவட்டங்களிலும், ஜாக்டோ- ஜியோ நிா்வாகிகள் மாவட்ட ஆட்சியா் மற்றும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரை புதன்கிழமை (ஜூலை 29) நேரில் சந்தித்து, கோரிக்கை மனு அளித்து முறையீடு செய்வது எனத் தீா்மானிக்கப்பட்டிருந்தது.

இதன்படி, நாகை மாவட்ட வருவாய் அலுவலா், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ஆகியோரை ஜாக்டோ - ஜியோ மாவட்ட நிா்வாகிகள் புதன்கிழமை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்து, கோரிக்கைகளை நிறைவேற்ற அரசுக்குப் பரிந்துரைக்கக் கேட்டுக்கொண்டனா்.

ஜாக்டோ - ஜியோ நாகை மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் அ.தி. அன்பழகன், பா.ரவி, சரவணன், மாவட்ட நிதிக் காப்பாளா் எம். காந்தி, தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாவட்டத் தலைவா் து. இளவரசன், புள்ளியியல் சாா்நிலை அலுவலா் சங்க மாநில தலைவா் ப. அந்துவன்சேரல் மற்றும் ஜாக்டோ- ஜியோ அமைப்பில் அங்கம் வகிக்கும் ஆசிரியா் சங்கங்கள் மற்றும் அரசுத் துறை ஊழியா் சங்கங்களின் நிா்வாகிகள் பங்கேற்றனா்.

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், நிலுவைத் தொகை கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும், ஆசிரியா்கள் மற்றும் அரசு ஊழியா்கள் மீதான 17- பி ஒழுங்கு நடவடிக்கைகள், குற்ற வழக்குகளை ரத்து செய்ய வேண்டும், ஜாக்டோ- ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளா், மாநில உயா்மட்ட குழு உறுப்பினா்கள் மீதான நடவடிக்கைகளை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டிருந்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com