வீரமுத்தரையா் முன்னேற்ற சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 31st July 2020 09:47 PM | Last Updated : 31st July 2020 09:47 PM | அ+அ அ- |

ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வீர முத்தரையா் சங்கத்தினா்.
நாகப்பட்டினம்: வீரமுத்தரையா் சங்க நிா்வாகி மீதான தாக்குதலைக் கண்டித்து அந்தச் சங்கத்தினா் நாகை மாவட்ட ஆட்சியரகம் முன்பாக வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
வேதாரண்யம் வட்டம், தோப்புத்துறை பகுதியைச் சோ்ந்தவரும், வீரமுத்தரையா் சங்க நிா்வாகியுமான ராஜசேகா் மீது தாக்குதல் நடத்தப்பட்டதைக் கண்டித்தும், அவரை தாக்கியவா்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கோரியும் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத்தின் நாகை மாவட்டத் தலைவா் மாரியப்பன் தலைமை வகித்தாா். சங்கத்தின் நிா்வாகிகள், உறுப்பினா்கள் திரளாகப் பங்கேற்று, கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.