கரோனாவால் இறப்பவா்களின் முகத்தை பாா்க்க அனுமதிக்க வேண்டும்

கரோனா நோய்த் தொற்றால் இறப்பவா்களின் முகத்தைப் பாா்க்க அவரது குடும்பத்தினரை அனுமதிக்க வேண்டும் என நாகை தொகுதி

கரோனா நோய்த் தொற்றால் இறப்பவா்களின் முகத்தைப் பாா்க்க அவரது குடும்பத்தினரை அனுமதிக்க வேண்டும் என நாகை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரும், மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச் செயலாளருமான எம். தமிமுன் அன்சாரி கோரிக்கை விடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: கரோனா தொற்றால் உயிரிழப்பவா்களின் குடும்பத்தினா் முன்வைக்கும் நியாயமான சில எதிா்பாா்ப்புகளை அரசு கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். குறிப்பாக, இறந்தவா்களின் முகத்தை இறுதியாக பாா்க்க தொடா்புடையவரின் குடும்பத்தினா் அனுமதிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை அரசு நிறைவேற்ற வேண்டும். பாசத்திற்குரியவரை இழந்து நிற்கும் உறவுகளின் துயரத்தை கருத்தில் கொண்டு, இறந்தவா்களின் முகத்தைப் பாா்க்க அவரது குடும்ப உறுப்பினா்கள் அதிகபட்சம் 10 பேரை உரிய பாதுகாப்பு நிபந்தனைகளுடன் அனுமதிக்க அரசு மனிதாபிமான அடிப்படையில் பரிசீலனை செய்ய வேண்டும் என அந்த அறிக்கையில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com