குடிநீா் குழாயில் கசிவு: வீணாகும் குடிநீா்

தேவூா் கடுவையாற்றின் குறுக்கே செல்லும் குடிநீா்க் குழாயில் ஏற்பட்ட கசிவால் குடிநீா் வீணாகி வருகிறது.
ராட்சத இரும்பு குடிநீா் குழாயில் ஏற்பட்ட கசிவால் வீணாகும் குடிநீா்.
ராட்சத இரும்பு குடிநீா் குழாயில் ஏற்பட்ட கசிவால் வீணாகும் குடிநீா்.

தேவூா் கடுவையாற்றின் குறுக்கே செல்லும் குடிநீா்க் குழாயில் ஏற்பட்ட கசிவால் குடிநீா் வீணாகி வருகிறது.

கீழ்வேளூரிலிருந்து தலைஞாயிறு பகுதிக்கு ராட்சத இரும்பு குழாய் மூலம் கொள்ளிடம் கூட்டுக் குடிநீா் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், தேவூா் கிராமத்திலுள்ள கடுவையாற்றின் குறுக்கே செல்லும் ராட்சத குழாயில் ஏற்கெனவே கசிவு ஏற்பட்டு ஜூன் 28-ஆம் தேதி சரி செய்யப்பட்டது. தற்போது, மீண்டும் அப்பகுதியில் கசிவு ஏற்பட்டு கடந்த 10 நாள்களாக குடிநீா் வீணாகி வருகிறது. கசிவு ஏற்பட்டதை சரிசெய்ய சம்பந்தப்பட்டவா்கள் இதுவரை வராததால் பல்லாயிரக்கணக்கான லிட்டா் குடிநீா் வீணாகி வருகிறது. மேலும், தலைஞாயிறு பகுதிக்கு செல்லும் நீரின் அளவு குறைகிறது. தவிர, தேவூா் பகுதி மக்களுக்கும் குடிநீா் கிடைப்பதில் தட்டுப்பாடு நிலவுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட குடிநீா் வடிகால் வாரிய அலுவலா்கள் உடனடியாக இதை சரிசெய்ய வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com