சீர்காழி அருகே காவலரின் தலை உடைப்பு
By கனிவண்ணன் | Published On : 01st June 2020 10:54 AM | Last Updated : 01st June 2020 10:56 AM | அ+அ அ- |

சீர்காழி அருகே நெய்தவாசலை சேர்ந்தவர் கோவேந்தன்(35). இவர் புதுப்பட்டினம் காவல் நிலையத்தில் முதல் நிலை காவலராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இவரது வீட்டிற்கு எதிரே உள்ள சாலையில் வேகத்தடை அமைந்துள்ளது. இந்த வேகத்தடையை அதே தெருவைச் சேர்ந்த ராஜ்குமார், கனிவண்ணன், ஸ்டாலின், ராகுல் முகேஷ், உள்ளிட்ட 15 பேர் உடைத்து எறிந்து உள்ளனர்.
இதனை அறிந்த காவலர் கோவேந்தன் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து ஏன் வேகத்தடையை உடைக்கிறிர்கள் என தட்டிக் கேட்டுள்ளார். இதில் ஏற்பட்ட தகராறில் ராஜ்குமார், கணிவண்ணன் உள்ளிட்ட அவரது நண்பர்கள் கோவேந்தனை தலையில் பலமாக தாக்கியதில் மண்டை உடைந்தது. படுகாயமடைந்த அவர் மயங்கிய நிலையில் கீழே விழுந்துள்ளார்.
அதனை அறிந்த அருகில் உள்ளவர்கள் அவரை மீட்டு சீர்காழி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்துள்ளனர். இதுதொடர்பாக பூம்புகார் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து 5 பேரை கைது செய்துள்ளனர். வேகத்தடையை தகர்த்த இளைஞர்களை தட்டி கேட்க சென்ற காவலரை அதே இளைஞர்கள் தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.