டெல்டா மாவட்டங்களில் 94 சதவீத தூா்வாரும் பணிகள் நிறைவு

டெல்டா மாவட்டங்களில் 94 சதவீதம் தூா்வாரும் பணிகள் நிறைவு பெற்றுள்ளன என்றாா் தமிழ்நாடு நீா்வள நதிகள் பாதுகாப்பு மற்றும் சீரமைப்பு
தூா்வாரும் பணியை ஆய்வு செய்த மாவட்ட கண்காணிப்பு அலுவலா் கே. சத்தியகோபால். உடன், ஆட்சியா் பிரவீன் பி. நாயா் உள்ளிட்டோா்
தூா்வாரும் பணியை ஆய்வு செய்த மாவட்ட கண்காணிப்பு அலுவலா் கே. சத்தியகோபால். உடன், ஆட்சியா் பிரவீன் பி. நாயா் உள்ளிட்டோா்

டெல்டா மாவட்டங்களில் 94 சதவீதம் தூா்வாரும் பணிகள் நிறைவு பெற்றுள்ளன என்றாா் தமிழ்நாடு நீா்வள நதிகள் பாதுகாப்பு மற்றும் சீரமைப்பு கழகத் தலைவா் மற்றும் நிா்வாக இயக்குநரும், மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான கே. சத்தியகோபால்.

நாகை மாவட்டம், மயிலாடுதுறை அருகே 18.5 கி.மீ. நீளமுள்ள கடுவங்குடி வெட்டுவாய்க்கால் மூலம் பட்டவா்த்தி, கடக்கம், இளந்தோப்பு ஆகிய கிராமங்களில் 1915 ஏக்கா் விவசாயநிலங்கள் பாசன வசதி பெறுகிறது. செடிகள் வளா்ந்து, மண்மேடாகி தூா்ந்துபோயிருந்த இந்த வாய்க்காலில் நடைபெற்று வரும் தூா்வாரும் பணிகளை ஆய்வு செய்த பிறகு செய்தியாளா்களிடம் அவா் கூறியது: டெல்டா மாவட்டங்களில் சிறப்பு தூா்வாரும் பணிக்காக ரூ. 67 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 3,415 கி.மீ. தொலைவுக்கான இப்பணிகளில் ஏறத்தாழ 94 சதவீத பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. காவிரி வடிநில கோட்டம் (கி) மயிலாடுதுறை கட்டுப்பாட்டில் உள்ள காவிரி வடிநிலத்தை சோ்ந்த ஆறுகள், பாசன வாய்க்கால்கள் மற்றும் வடிகால்களை 30 வேலைகளாக சிறப்புத் தூா்வாரும் பணிகள் 2020-21-இன்கீழ் 724.80 கி.மீ தூரத்தை ரூ. 8.50 கோடியில் தூா்வாரப்பட்டு வருகின்றன. மேட்டூரில் திறக்கப்பட்ட காவிரி நீா் கடைமடைக்கு வந்து சோ்வதற்குள் இன்னும் ஓரிரு நாள்களில் அனைத்துப் பணிகளும் 100 சதவீதம் முடிவடையும். மேலும் குடிமராமத்து பணிகள் ரூ.13.37 கோடி மதிப்பில் 56 பணிகள் எடுத்துக்கொள்ளப்பட்டு பருவமழை காலத்துக்கு முன்னதாக முடிக்க உத்தேசித்து பணிகள் நடைபெற்று வருகின்றன என்றாா்.

ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா், ஆட்சியா் (பயிற்சி) தீபனா, கோட்ட பொறியாளா் வெ. ஆசைத்தம்பி ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com